தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் 2025ஆம் ஆண்டிற்கான உதவியாளர்/ இளநிலை உதவியாளர் பணிக்கான 2513 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு கட்டணமில்லா இணைய வழி (Online) பயிற்சி வகுப்புகள் மண்டல அளவில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தேர்வுக்கு விண்ணப்பித்த போட்டித்தேர்வர்கள் […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- டி.என்.பி.எஸ்.சி. குரூப 2 முதல்நிலைத் தேர்வுகள் -2025 க்கான மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி மாதிரி தேர்வுகள் தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படுகிறது. முதல் மாதிரி தேர்வு கடந்த சனிக்கிழமை (6.9.25) அன்று நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டாவது மாதிரி தேர்வு வருகிற சனிக்கிழமை (13.9.2025) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் […]
காதல் தோல்வியால் விரக்தி: தற்கொலைக்கு முன்பாக நண்பருக்கு வாட்சப் ஆடியோவில் வாலிபர் உருக்கம்
கோவில்பட்டி வள்ளுவர்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ரவி பாண்டியன் மகன் சக்தி கணேஷ் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்தார். ஆனால் அந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறொருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த சக்தி கணேஷ், வேளைக்கு சரியாக செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்,மேலும் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது, இதனால் அவரது பெற்றோர் கண்டித்தனர். இந்நிலையில் அவர் நேற்று […]
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பல்லாக்கு சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் இருந்து மாணவ மாணவிகளை அழைத்து வருவதற்காக இன்று காலை வேன் புறப்பட்டு சென்றது. காமநாயக்கன்பட்டி அருகே அச்சன்குளத்தைச் சேர்ந்த முத்துராஜ்(45) என்பவர் வேனை ஓட்டினார். பாண்டவர்மங்கலம் ஊருக்குள் மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு, மீண்டும் பள்ளிக்கு கண்மாய் கரையோர சாலை வழியாக வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த தண்ணீர் டேங்கர் டிராக்டருக்கு வழிவிட வலதுபுறமாக வேனை ஒதுக்கியபோது, எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் வேன் […]
கோவில்பட்டி,கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் மகளிர்க்கழகம் ‘பெண்களுக்கான சட்ட உரிமைகள் மற்றும் ஆதரவு அமைப்பு’ என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. தமிழ்த்தாய் தொடங்கப்பட்ட இந்நிகழ்வில் மகளிர்க்கழகம் மற்றும் சம வாய்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.சித்ரலேகா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். மகளிர்க்கழக உறுப்பினரும் வேதியியல் துறைத்தலைவருமான பா.உமாதேவி வாழ்த்தி பேசினார். மகளிர்க்கழக உறுப்பினர் இரா.கவிதா மஞ்சு சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து துணை காவல் ஆய்வாளர் க. காயத்ரி மற்றும் காவலர் எஸ்.பொன்னுலட்சுமி […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுடன் இணைந்த பூதேவி நீலாதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. அதிகாலை 5 மணிக்கு விஷ்வக்கேஷ்ன ஆராதனை, காலை 6 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், 7 மணிக்கு பூர்ணாகுதி, 7.30 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் திருவீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திருநெல்வேலி மாவட்டம், தென்னிமலையைச் சேர்ந்த கோடீஸ்வரன் (வயது 38) என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு களக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இந்த செயலுக்கு அந்த சிறுமியின் தாயார் மல்காமால்(35) உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, கோடீஸ்வரன்(38) மற்றும் மல்காமால் ஆகிய 2 பேரையும் கைது […]
ஒரு கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட மாதம், நாள் அக்கோவிலின் ஜன்ம நட்சத்திர நாள் போன்றது. அன்றைய தினம் வருஷாபிஷேகம் என்றபெயரில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.அந்த வகையில் கோவில்பட்டியில் அருள் பாலிக்கும் பத்திரகாளியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா இன்று நடைபெற்றது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், யாக பூஜைகளுடன் விழா தொடங்கியது.காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் – கும்பங்கள் எழுந்தருளல், விமான கோபுரங்கள் அபிஷேகம், மூலஸ்தான கும்ப அபிஷேகம் நடைபெற்றது, மதியம் 12மணிக்கு […]
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி வருவாய் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி கோவில்பட்டி செவன்த்டே மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் இறுதிப் போட்டியில் நாலூமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி அணி 51:50 என்ற தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தி முதல் இடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றது,. 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவின் இறுதிப் போட்டியில்குலசேகர பட்டினம் அருள் மேல்நிலைப்பள்ளி அணி, தூத்துக்குடி […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பாக சௌபாக்கியா மஹாலில் ரோட்டரி குடும்ப விழா நடைபெற்றது. விழாவில் பிரபல பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் அன்னபாரதி கலந்துகொண்டார். அவர் “ இல்லறம் இனிக்கட்டும் “என்ற தலைப்பில் பேசினார். விழாவிற்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன், மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ், முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர் முத்து செல்வம், பாபு, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பழனிகுமார் வரவேற்று பேசினார்,. விழாவில் […]







