கோவில்பட்டி அருகே பள்ளத்தில் பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 7 பேர் காயம்
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பல்லாக்கு சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் இருந்து மாணவ மாணவிகளை அழைத்து வருவதற்காக இன்று காலை வேன் புறப்பட்டு சென்றது.
காமநாயக்கன்பட்டி அருகே அச்சன்குளத்தைச் சேர்ந்த முத்துராஜ்(45) என்பவர் வேனை ஓட்டினார். பாண்டவர்மங்கலம் ஊருக்குள் மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு, மீண்டும் பள்ளிக்கு கண்மாய் கரையோர சாலை வழியாக வேன் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த தண்ணீர் டேங்கர் டிராக்டருக்கு வழிவிட வலதுபுறமாக வேனை ஒதுக்கியபோது, எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.
இதில், ஓட்டுநர் முத்துராஜ் மற்றும் 6 மாணவ, மாணவிகள் லேசான காயம் அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.







