பெண்களுக்கான சட்ட உரிமைகள் மற்றும் ஆதரவு அமைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Oplus_16908288
கோவில்பட்டி,கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் மகளிர்க்கழகம் ‘பெண்களுக்கான சட்ட உரிமைகள் மற்றும் ஆதரவு அமைப்பு’ என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
தமிழ்த்தாய் தொடங்கப்பட்ட இந்நிகழ்வில் மகளிர்க்கழகம் மற்றும் சம வாய்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.சித்ரலேகா வரவேற்று பேசினார்.

கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். மகளிர்க்கழக உறுப்பினரும் வேதியியல் துறைத்தலைவருமான பா.உமாதேவி வாழ்த்தி பேசினார். மகளிர்க்கழக உறுப்பினர் இரா.கவிதா மஞ்சு சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து துணை காவல் ஆய்வாளர் க. காயத்ரி மற்றும் காவலர் எஸ்.பொன்னுலட்சுமி ஆகியோர் குழந்தை திருமணம், பெண்கள் பாதுகாப்பு, பாலியல் தொந்தரவு மற்றும் அதற்குரிய சட்ட ரீதியான அணுகுமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் 200 மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முடிவில் மூன்றாமாண்டு மாணவி ம.உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.
.







