கோவில்பட்டி சுந்தரராஜபெருமாள் கோவிலில் வருஷாபிஷேக விழா
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுடன் இணைந்த பூதேவி நீலாதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.

அதிகாலை 5 மணிக்கு விஷ்வக்கேஷ்ன ஆராதனை, காலை 6 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், 7 மணிக்கு பூர்ணாகுதி, 7.30 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் திருவீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்







