• October 22, 2026

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய் உட்பட 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

 சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய் உட்பட 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

திருநெல்வேலி மாவட்டம், தென்னிமலையைச் சேர்ந்த கோடீஸ்வரன் (வயது 38) என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு களக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில்  ஈடுபட்டுள்ளார். இந்த செயலுக்கு அந்த சிறுமியின் தாயார் மல்காமால்(35)  உடந்தையாக இருந்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, கோடீஸ்வரன்(38) மற்றும் மல்காமால் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை விசாரித்து, நீதிமன்ற விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, 2 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.75 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவு பிறபித்தார்.

இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா (தற்சமயம் தூத்துக்குடி மாவட்டம்), சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, காவல்துறையினர், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு . சிலம்பரசன் பாராட்டினார்.

.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *