கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா


ஒரு கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட மாதம், நாள் அக்கோவிலின் ஜன்ம நட்சத்திர நாள் போன்றது. அன்றைய தினம் வருஷாபிஷேகம் என்றபெயரில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
அந்த வகையில் கோவில்பட்டியில் அருள் பாலிக்கும் பத்திரகாளியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், யாக பூஜைகளுடன் விழா தொடங்கியது.காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் – கும்பங்கள் எழுந்தருளல், விமான கோபுரங்கள் அபிஷேகம், மூலஸ்தான கும்ப அபிஷேகம் நடைபெற்றது,
மதியம் 12மணிக்கு மேல் கோவில் கலையரங்கில் அன்னதானம் நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்செய்தனர். அன்னதானத்திலும் பங்கேற்றனர். கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,
இரவு 7 மணிக்கு- நாடார் தேங்காய், பழம், காய்கறி வியாபாரிகள் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பத்திரகாளியம்மன் திருவீதி உலா நடைபெறும்.







