கோவில்பட்டியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி வருவாய் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி கோவில்பட்டி செவன்த்டே மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் இறுதிப் போட்டியில் நாலூமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி அணி 51:50 என்ற தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தி முதல் இடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றது,.

17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவின் இறுதிப் போட்டியில்குலசேகர பட்டினம் அருள் மேல்நிலைப்பள்ளி அணி, தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் பள்ளி அணியை 23:22 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றது.
19 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவின் இறுதிப் போட்டியில் குலசேகர பட்டினம் அருள் மேல்நிலைப்பள்ளி அணி, நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி அணியை 31: 28 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய கபடி வீரரும் அர்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசன்’ கலந்து கொண்டார். அவர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்.
விழாவில் முன்னாள் பஞ்சாயத்து துனைத் தலைவர் பாண்டியராஜன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன், செவன்த்டே பள்ளி முதல்வர் ஜார்ஜ் பவுல்ராஜ், மற்றும் பரதன், அந்தோணி உடற்கல்வி ஆசிரியர்ககள் ராஜேஷ் கண் ,முனைவர் கரிகாலன், காளிராஜ், சுடலை, முனைவர் லட்சுமணப் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்,







