கோவில்பட்டியில் ரோட்டரி குடும்ப விழா
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பாக சௌபாக்கியா மஹாலில் ரோட்டரி குடும்ப விழா நடைபெற்றது. விழாவில் பிரபல பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் அன்னபாரதி கலந்துகொண்டார். அவர் “ இல்லறம் இனிக்கட்டும் “என்ற தலைப்பில் பேசினார்.
விழாவிற்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன், மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ், முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர் முத்து செல்வம், பாபு, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பழனிகுமார் வரவேற்று பேசினார்,.

விழாவில் பேச்சாளர் அன்னபாரதிக்கு ரோட்டரி புதுமைப்பெண் விருது வழங்கப்பட்டது. ரோட்டரி உறுப்பினர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள். முடிவில் பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்







