கூட்டுறவு சங்கங்களின் உதவியாளர் பணிக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமா?
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் 2025ஆம் ஆண்டிற்கான உதவியாளர்/ இளநிலை உதவியாளர் பணிக்கான 2513 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு கட்டணமில்லா இணைய வழி (Online) பயிற்சி வகுப்புகள் மண்டல அளவில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தேர்வுக்கு விண்ணப்பித்த போட்டித்தேர்வர்கள் கீழ்க்கண்ட கூகுள் படிவத்தினை பூர்த்தி செய்து சப்மிட் செய்யவும். கீழ்கண்ட கூகுள் படிவத்தை 12.9.2025 – மாலை 3 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
https://forms.gle/BmzHz5Ly9XiEWBCJ6
மேலும் தகவல்களுக்கு 0461-2003251 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







