குரூப 2 தேர்வுக்கான இரண்டாவது மாதிரி தேர்வு 13-ந் தேதி தூத்துக்குடியில் நடக்கிறது
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. குரூப 2 முதல்நிலைத் தேர்வுகள் -2025 க்கான மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி மாதிரி தேர்வுகள் தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படுகிறது.
முதல் மாதிரி தேர்வு கடந்த சனிக்கிழமை (6.9.25) அன்று நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டாவது மாதிரி தேர்வு வருகிற சனிக்கிழமை (13.9.2025) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு Question Paper and OMR Sheet வழங்கப்படும். புதிதாக தேர்வு எழுத வருபவர்கள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,, டி.என்.பி.எஸ்.சி. குரூப 2 விண்ணப்பத்தின் முதல் பக்கம் ஆகியவற்றை எடுத்து வரவும். ஏற்கனவே கொடுத்தவர்கள் மீண்டும் கொடுக்க தேவையில்லை.
இந்த நேரடி மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் குரூப 2 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பித்த போட்டித் தேர்வர்கள் மட்டும் கீழ்க்கண்ட கூகுள் படிவத்தை 12.9.2025 மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யவும்.
முதல் மாதிரி தேர்வு எழுதிய மாணவர்களும் மீண்டும் கூகுள் பார்ம்ஸ் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்
https://forms.gle/mcxTUpnyE7ih2jTd9
மேலும் கூடுதல் விவரங்களுக்கு 0461-2003251 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி.







