• October 22, 2026

Month: December 2023

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ரூ 1 கோடி தேர்தல் நிதி திரட்ட

தூத்துக்குடி மாவட்டம் ம.திமுக நிர்வாகிகள் தேர்தல் நிதி ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி  சவுபாக்கியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ம.தி.மு.க. அவைத்தலைவர் பேச்சிராஜ் தலைமை வழங்கினார். மாநில மதிமுக துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன்,வடக்கு மாவட்ட  மதிமுக செயலாளர் ஆர்.எஸ் ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் நிதியாக 1 கோடி ரூபாய் திரட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு தேர்தல் நிதி திரட்ட ரசீது புத்தகத்தை பொருளாளர் செந்தில் […]

செய்திகள்

பா.ஜ.க.வுடன் தி.மு.க ரகசிய உறவு;டி. ஜெயக்குமார் சொல்கிறார் 

சென்னை திரு.வி.க நகரில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி. அளித்தார். அவர் கூறியதாவது :- காவிரி விவகாரத்தில், தற்போதைய தமிழக முதல்வரின் நடவடிக்கை என்பது முழுக்க,முழுக்க தோல்வி அடைந்துவிட்டது. நமது உரிமை என்பது 205 டி.எம்.சி தண்ணீர், இதனைப் புரட்சித்தலைவர்,புரட்சித் தலைவி அம்மா,எடப்பாடியார் ஆகியோரது ஆட்சியில் அரசிதழில் வெளியிடப்பட்டு, அதன்படி குழுக்கள் போடப்பட்டு, உரிமையை மீட்டெடுத்தது அ. தி. மு. க.தான். ஆனால் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட  தி. மு. க. செயற்குழு கூட்டம் 

தூத்துக்குடி கலைஞர் அரங்கில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும் – மாவட்டச் செயலாளருமான கீதாஜீவன்   இளைஞரணியின்  மாநில மாநாடு மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்,மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி

மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகை மாட்டும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; கலெக்டர்

தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி கூட்டம் கலெக்டர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலரும் மாவட்ட கிரீன் கமிட்டி செயலருமான.மு. மகேந்திரன் முன்னிலை வகித்தார்.  இந்த கூட்டத்தில்.  மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடி. பேசுகையில், “சாலை ஓரங்களிலும், தெருக்களிலும் உள்ள மரங்களில் பல தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகையை ஆணி  அடித்தும் மற்றும்   இரும்பு கம்பியால் கட்டி வைத்து உள்ளனர். இதனால் மரங்கள் உளுத்து […]

ஆன்மிகம்

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

அய்யப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகை மாதம்  முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்கு பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19 -ந் தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னி தானத்திற்கு செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கும் படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ளவேண்டும்.  துளசிமணி அல்லது உருத்திராட்சமாலை 108 அல்லது 54 மணிகள் […]

கோவில்பட்டி

காமநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாக கட்டிடம் திறப்பு

கோவில்பட்டி கல்வி மாவட்டம் காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிதலமடைந்து இருந்த  சுகாதார வளாக கட்டிடத்தை கோவில்பட்டி ஜே.சி.ஐ. மற்றும் கல்பகலட்சுமி அறக்கட்டளை இணைந்து  ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டன. இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து சுகாதார வளாக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். மேலும் கடந்த ஆகஸ்ட் 7 ம் தேதி ஜே.சி.ஐ. சார்பில் நடந்த தேசிய அளவிலான திறனாய்வு […]

கோவில்பட்டி

பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்து தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இன்று காலை, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீப்பெட்டி தொழில் பாதுகாப்பு குழு கன்வீனர் கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள்  எம்.எல்.ஏ. நூர்முகமது கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேது ரத்தினம், கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ், கவுன்சிலர் ஜோதிபாசு, கே.பி.ஆறுமுகம் உள்பட […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் சலவைக்கூடம் திறப்பு

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 22 லட்சம் மதிப்பில் சலவைக்கூடம் கட்டப்பட்டுள்ளது. மோட்டார் பம்ப் செட்டுடன் கூடிய தொட்டிகள் அமைத்து கட்டப்பட்டுள்ள இந்த சலவைக்கூடத்தின்  திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, சலவை கூடத்தை  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு சலவை தொழிலாளர் சங்க தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார். செயலாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்..தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க.  நிர்வாகிகள் மற்றும் சலவை […]

செய்திகள்

சென்னை எண்ணூர் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய் அகற்ற நடவடிக்கை; டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்

சென்னை எண்ணூர் பகுதியில் கடலில் கச்சா எண்ணெய் கலந்துள்ள பகுதிகளை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் படகில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்று இருந்தனர். ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது டி.ஜெயக்குமார் கூறியதாவது:-. முகத்துவாரம் தான் மீனவர்களுக்கு வாழ்வாதாரம். அதேபோல முகத்துவாரத்தால் மீன்கள் இனவிருத்தி அடைந்து  அதன் மூலம்  கடலுக்கு சென்று மீன் உற்பத்தி அதிகமாகும். அதனைச் சார்ந்த மீனவ கிராமங்களுக்கும் ஒரு வாழ்வாதாரம் கிடைக்கும். […]

கோவில்பட்டி

மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்தகோரி பொதுமக்களின் கையெழுத்து படிவங்கள்; கலெக்டருக்கு தபாலில் அனுப்பப்பட்டன

கோவில்பட்டியில் இருந்து குருமலை வழியாக  கடம்பூர் வரை செல்லும் மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்தக்கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்து படிவங்களை கோரிக்கை மனுவோடு இணைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தபால் மூலம்  அனுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சுபேதார் கருப்பசாமி, முனைவர் சம்பத்குமார், ஐ.என்.டி.யு.சி. ராஜசேகரன், […]