தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ரூ 1 கோடி தேர்தல் நிதி திரட்ட முடிவு
தூத்துக்குடி மாவட்டம் ம.திமுக நிர்வாகிகள் தேர்தல் நிதி ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி சவுபாக்கியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ம.தி.மு.க. அவைத்தலைவர் பேச்சிராஜ் தலைமை வழங்கினார்.
மாநில மதிமுக துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன்,வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.எஸ் ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்


தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் நிதியாக 1 கோடி ரூபாய் திரட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு தேர்தல் நிதி திரட்ட ரசீது புத்தகத்தை பொருளாளர் செந்தில் அதிபன் வழங்கினார். கூட்டத் தொடக்கத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ் வரவேற்று பேசினார். முடிவில் மாநில தீர்மான குழு உறுப்பினர் முத்து செல்வன் நன்றி கூறினார்.
.







