அதிமுகவின் 52 வது நிறுவன தினத்தையொட்டி, சென்னை ராயபுரத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் ஆர். மனோ ஏற்பாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு, நிதி உதவி ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை மக்களுக்கு குறைந்து விட்டது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை பற்றாக்குறை இருஇருக்கிறது. காலி பணியிடங்களை நிரப்ப அரசு எவ்வித நடவடிக்கையும் […]
அரசு திட்டங்களின் பயன்கள், அனைத்து தரப்பினருக்கும் சேர நடவடிக்கை; தூத்துக்குடி புதிய கலெக்டர்
தூத்துக்குடி மாவட்ட 27வது கலெக்டராக லட்சுமிபதி, இன்று (20.10.2023) பதவியேற்றுகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் முழுமையாக வளர்ச்சி அடைவதற்கு தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் அதாவது அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து அனைத்து திட்டங்களும் முழுமையாக அனைத்து தரப்பினருக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்துவது என்பது எனது செயல்பாடுகளில் முக்கியமாக இடம்பெறும். அதைத்தவிர அடிப்படை வசதிகள் அனைத்து பகுதிகளிலும் குடிநீர், சாலை வசதி, பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை போன்ற […]
கோவிலுக்கு வெளியே இருக்கும் யாசகர்களுக்கும், வசதியற்ற ஏழை மக்களுக்கும், நீங்கள் கோவிலுக்குள் நுழையும் முன்பு கீரை சாதம், பாசிப்பருப்பு சாம்பார் சாதம் போன்ற அன்னதானம் மற்றும் பணம் தானம் செய்வது நன்று. எந்த தானம் செய்வதாக இருந்தாலும், அதை கோவிலுக்குள் நுழையும்முன்பு செய்துவிடுங்கள் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு வெளியே வந்தவுடன் தானம் ஏதும் செய்யாமலும், வேறு எங்கும் செல்லாமலும் வீட்டுக்கு செல்வது நன்று எப்போது எந்த கோவிலுக்கு சென்றாலும் இந்த முறையில் தான் எந்த தானமும் செய்யவேண்டும். […]
நாம் வழிபாட்டுக்காக ‘அகல் விளக்கு’ வைத்து வழிபடுகிறோம். இதில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. 1. அகல் விளக்கு – சூரியன் 2. நெய் / எண்ணெய் திரவம் – சந்திரன் 3. திரி – புதன் 4. அதில் எரியும் ஜ்வாலை – செவ்வாய் 5. இந்த ஜ்வாலையின் நிழல் கீழே – ராகு 6. ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் – குரு 7. ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி – சனி 8. வெளிச்சம் […]
ஆதிசங்கரர், வேதாந்த தேசிகர், வித்யாரண்யர் ஆகியோருக்கு ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் எல்லோரும் மகாலட்சுமிக்கு ஸ்தோத்திரம் செய்தவர்கள். தங்களை நாடி வந்த ஏழைக்கு செல்வம் கிடைக்க வேண்டும் என்று `கனகதாரா ஸ்தோத்திரம்’ செய்தார் ஆதிசங்கரர். வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி செய்தார். வித்யாரண்யருக்கு மகாலட்சுமியினுடைய தரிசனமே கிடைத்தது. ஆனால், இவர்கள் எல்லோருமே தங்களுக்காக மகாலட்சுமியை பிரார்த்திக்கவில்லை. ஆதிசங்கரர் மகாலட்சுமியை செல்வத்தின் அதிதேவதையாக மட்டும் கருதவில்லை. ஞானம் என்னும் நித்திய செல்வத்தை அருள்பவளாகவே கருதித் துதித்தார். அவர் பாடிய ஸ்லோகம் […]
இந்து சமயம் ஆறு பிரிவுகளாக இருந்தது. பின்னர் ஆதிசங்கரரால் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இந்த ஆறு பிரிவுகளையும்ஒன்றாக இணைத்து இந்து மதம் என பெயர் பெற்றது. 1. சைவம்:- சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள். 2. வைணவ1ம்:- விஷ்ணுவையும், அவரது 10 அவதாரங்களையும் வணங்குபவர்கள். 3. சாக்தம்:- சக்தியை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள். 4. கவுமாரம்:- முருகனை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள். 5. சவுரம்:- சூரியனை முழுமுதற் கடவுளாக வழங்குபவர்கள். 6.காணாபத்தியம்:- விநாயகரை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள். […]
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆட்டோ டிரைவருக்கு முதுகெலும்பு முறிவு அறுவை சிகிச்சை; டாக்டர்கள்
வாக்கருடன் இருப்பவர் தான் ஆட்டோ டிரைவர் பழனிச்சாமி.
கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை மின் நிலையங்களில் அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 21-ந் தேதி (சனிக்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார தடை அறிவிக்கப்பட்டு இருந்தது.. இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) மின்தடை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக 31/10/23 செவ்வாய்க்கிழமை அன்று ஏற்கனவே அறிவித்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த செந்தில்ராஜ் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்வார். அதிமுக ஆட்சியின் போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்ட செந்தில்ராஜ் திமுக ஆட்சியிலும் தொடர்ந்து அந்த பணியில் நீடித்து வந்தார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தார். 3 ஆண்டுகள் கலெக்டராக இருந்த செந்தில்ராஜ் கடந்த வாரம் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் சிப்காட் மேலாண் இயக்குனராக நியமனம் செய்யபட்டுள்ளார். செந்தில்ராஜிக்கு […]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் 82 வயதான அவர் உடல்நல குறைவு காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தியை அறிந்து பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து வருகிறார்கள். அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக , அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பக்தர்கள் கண்ணீர் […]







