16 பிரிவுகளை உள்ளடக்கிய  சைவ சமயம்

 16 பிரிவுகளை உள்ளடக்கிய  சைவ சமயம்

இந்து சமயம் ஆறு பிரிவுகளாக இருந்தது. பின்னர் ஆதிசங்கரரால் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இந்த ஆறு பிரிவுகளையும்ஒன்றாக இணைத்து இந்து மதம் என பெயர் பெற்றது.

1. சைவம்:- சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள்.

2. வைணவ1ம்:- விஷ்ணுவையும், அவரது 10 அவதாரங்களையும் வணங்குபவர்கள்.

3. சாக்தம்:- சக்தியை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள்.

4. கவுமாரம்:- முருகனை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள்.

5. சவுரம்:- சூரியனை முழுமுதற் கடவுளாக வழங்குபவர்கள்.

 6.காணாபத்தியம்:- விநாயகரை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள்.

மேலும் (ஸ்மார்த்தம்) என்றழைக்கப்பட்ட பிரிவினர் சிவன், சக்தி, விஷ்ணு, முருகன், சூரியன், விநாயகர், என்ற எல்லா தெய்வங்களையும் வணங்குபவர்கள்.

(பவுத்தம்) என்ற புத்தர் வழிபாடும் உள் வந்தது

சைவ ஆகமங்கள் என்று அழைக்கப்படும் சிவ ஆகமங்கள் 28 ஆகும். சிவபெருமானே வேதங்களையும், ஆகமங்களையும் சதாசிவமூர்த்தி என்ற நிலையில் இருந்து அருளிச் செய்தார் என்பது சைவ சமயத்தின் கொள்கை.

சதாசிவமூர்த்தி என்பது கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆக நான்கு திசைகளுக்கு நான்கு முகமும் வானத்தை நோக்கி ஒரு முகம் என ஐந்து முகங்கள் கொண்டது. ஒவ்வொரு திசைக்கு ஐந்து ஆகமங்களும், வானத்தை நோக்கிய முகத்தில் இருந்து 8 ஆகமங்களும் ஆக 28 ஆகமங்கள் அருளச் செய்தார்.

சத்தியோசதம் எனப்படும் மேற்கு முகத்தால் சொல்லப்பட்ட ஆகமங்கள் ஐந்து.

1. காமிகம் (திருவடிகள்)

2.யோகசம் (கணைக்கால்கள்) 3.சிந்தியம் (கால்விரல்கள்)

4. காரணம் (கெண்டைக்கால்கள்)

5. அசிதம் (முழந்தாள்)  என்பன.

வாமதேவம் எனப்படும் வடக்கு முகத்தால் சொல்லப்பட்ட ஆகமங்கள் ஐந்து

1.தீப்தம் (தொடைகள்)

2. சூக்குமம் (அபானவாயில்)

3.சகச்சிரம் (இடுப்பு)

4. அஞ்சுமான் (முதுகு)

5. சுப்ரபேதம் (தொப்புள்) என்பன. மேற்கண்ட 10 ஆகமங்களும் சிவபேத ஆகமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கீழ்க்கண்ட 18 ஆகமங்களும் ருத்திரபேத ஆகமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அகோரம் எனப்படும் தெற்கு முகத்தால் சொல்லப்பட்ட ஆகமங்கள் ஐந்து

1.விசயம் (வயிறு)

2. நிச்சுவாசம் (நாசி)

3.சுவாயம்புவம் (மார்பு)

 4.ஆக்கினேயம் (கண்கள்),

5. வீரம் (கழுத்து) என்பன.

தற்புருடம் எனப்படும் கிழக்கு முகத்தால் சொல்லப்பட்ட ஆகமங்கள் ஐந்து

1.இரவுரவம் (செவிகள்)

2. மகுடம் (திருமுடி)

3. விமலம் (கைகள்)

4. சந்திரஞானம் (மார்பு)

5.முகவிம்பம் (முகம்) என்பன.

 ஈசான எனப்படும் மேல் நோக்கிய முகத்தால் சொல்லப்பட்ட ஆகமங்கள் எட்டு

1.புரோற்கீதம் (நாக்கு)

2. இலளிதம் (கன்னங்கள்)

3. சித்தம் (நெற்றி)

4. சந்தானம் (குண்டலம்)

5. சருவோக்தம் (உபவீதம்)

6.பாரமேசுரம் (மாலை)

7. கிரணம் (இரத்தினாபரணம்)

8. வாதுளம் (ஆடை)

இவைத்தவிர வைதீகர்களால் ஒதுக்கப்பட்ட காபாலிக என்னும் சைவ ஆகமங்கள் 8 உள்ளன. அவை,

1. சித்த பைரவ தந்திரம்,

2.மாயிகே பைரவம்,

3.கங்காள பைரவம்,

4. யோகிணி பைரவம்,

5. காலாக்கினி பைரவம்,

6. சாக்தி பைரவம்,

7. பைரவநாத தந்திரம்,

8. மஹாபைரவ தந்திரம்.

சைவ சமயம் 16 பிரிவுகளை உள்ளடக்கி, பரம்பொருளை (சிவம்) இறைவனாகக் கொண்டு வணங்கி வருகிறது.அவை:-

1. ஊர்த்த சைவம்.

2. அனாதிசைவம்

3.மகாசைவம்

4பேதசைவம்

5.அபேதசைவம்

6.அந்தர சைவம்

7.குணசைவம்

8.நிர்க்குணசைவம்

9. அத்துவாசைவம்

10.யோக சைவம்

11.ஞானசைவம்

12அணுசைவம்

13கிரியா சைவம்

14நாலுபாத சைவம்

15.ஆதி சைவம்

16.சுத்தசைவம்.

என 16 பிரிவுகளாக உள்ளது.

சரியை, கிரியை, யோகம், ஞானம்,

என நான்கு வகையான யோகங்களை சைவ ஆகமங்கள் வலியுறுத்துகின்றன.

\

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *