அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி சென்னையில் நாளை நடைபெறும் உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, […]
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது. ஜானகி அம்மாள் தலைமையில் ஓரு அணியும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் செயல்பட தொடங்கியது. 1989 தேர்தலை ஜா. அணி மற்றும் ஜெ.அணி என்று வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் ஜா. அணியில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஜெ. அணியில் 27 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.இதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். கட்சி அலுவலகத்தையும் மீட்டார். பின்னர் 1990 ம் ஆண்டில் அ.தி.மு.க.வில் நெடுஞ்செழியன், […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி சென்னையில் இருந்து கடந்த மாதம் கப்பல் மூலம் . முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக 2-வது கட்டமாக நிவாரண பொருட்கள் தூத்துக்குடி […]
கோவில்பட்டி வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக நீதிமன்றத்தில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி ஆர். ரத்தினவேல் பாண்டியன், மாவட்ட உரிமையியல் நீதிபதி வி முரளிதரன் நீதித்துறை நடுவர்கள் எம் கடற்கரை செல்வம், பி. பீட்டர், ஏ முகமது சாதிக் உசேன் ஆகியோர் முன்னிலையில் வக்கீல்கள், ஊழியர்கள் யோகாசனம் செய்தனர். வழக்கறிஞர்கள் சந்தானம் , சந்திரசேகர், முத்துக்குமார் மற்றும் நீதிபதிகள் ,வழக்கறிஞர்கள். அனைத்து ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு […]
அ.தி.மு.க.பொதுக்குழுவை திட்டமிட்டபடி நாளை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் ஆனால் எந்த சமரசத்திற்கும் ஓ.பன்னீர் செல்வம் ஒத்துக்கொள்ளவில்லை. ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் யாருக்கு அதிக ஆதரவு […]
தூத்துக்குடி மாவட்ட தமிழன் அமெச்சூர் பாடி பில்டிங் மற்றும் பிட்னஸ் அசோசியேஷன் மற்றும் எஸ்.வி.பி.எஸ்.பெல் ஸ்போர்ட்ஸ் சென்டர் இணைந்து நடத்திய தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆணழகன் மற்றும் பிட்னஸ் தூத்துக்குடி 2022- க்கான போட்டிகள் நடைபெற்றது. எஸ்.வி.பி.எஸ். ஜெயசீலி மணியப்பன் குத்துவிளக்கு ஏற்றினார். தூத்துக்குடி தொழிலதிபர் பழரசம் பா.விநாயகமூர்த்தி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 151 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியானது உடல் எடை அடிப்படையில் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் […]
ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தர்மம் மறுபடியும் வெல்லும் என்று டுவீட் செய்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்ணகிரியை சேர்ந்தவர் தமிழகன்(வயது 57) இன்று காலை வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வந்தார்.அப்போது, அங்கு மறைந்திருந்து அவரது மகன் காசிராஜன்(36) தந்தையை அரிவாளால் வெட்ட முற்பட்டபோது தந்தை தமிழழகன் அரிவாளை பறித்து மகன் காசிராஜனை வெட்டி கொலை செய்தார்மேலும், தமிழழகனுக்கு பாதுகாப்பிற்காக உடன் வந்த அவரது சகோதரர் கடல் ராஜா மற்றும் சகோதரர் மகன் காசிதுரை ஆகிய இருவரும் பலத்த அரிவாள் வெட்டு காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. இதை தொடர்ந்து ஒருங்கிணப்பாளர் ஓபன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் நேரடியாக சவால் விடுத்து வருகிறார்கள். ஏற்கனவே 23-ந் தேதி கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கபட்டு இருக்கிறது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது. எனவே அவரே ஒருங்கிணைப்பாளராக […]
ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது நாடு முழுவதும் நிறுத்தப்பட்ட ரெயில்களில் இதுவும் ஒன்றாகும்.தற்போது தளர்வுகள் முழுமையாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ரெயிலை இயக்க வேண்டும் என அனைத்து மாவட்ட மக்களும், தென்மாவட்ட எம்.பி.க்களும் வலியுறுத்தி வந்தனர்இந்நிலையில் தென்னக ரெயில்வே நிர்வாகம் ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இம்மாதம் 27-ந் தேதி முதல் வாரம் 3 முறை இயக்கப்படும் என அறிவித்துள்ளது.அதன்படி வருகிற 27-ந் தேதி முதல் திங்கள், புதன், […]







