அ.தி.மு.க. பொதுக்குழு நடக்குமா? பின்னணியில் பகீர் தகவல்கள்…
![அ.தி.மு.க. பொதுக்குழு நடக்குமா? பின்னணியில் பகீர் தகவல்கள்…](https://tn96news.com/wp-content/uploads/2022/06/download-2-6.jpg)
அ.தி.மு.க.பொதுக்குழு கூட்டம் நடைபெறும் திருமண மண்டபம் இதுதான்,
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. இதை தொடர்ந்து ஒருங்கிணப்பாளர் ஓபன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் நேரடியாக சவால் விடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே 23-ந் தேதி கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கபட்டு இருக்கிறது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது. எனவே அவரே ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்படக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.
இதற்கிடையே ஒற்றை தலைமுறை கூடாது. இப்போது இருப்பது மாதிரி இரட்டை தலைமை தான் கட்சிக்கு நல்லது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.
மேலும் 23 அன்று நடைபெறும் செயற்குழு, பொதுக்குழுவை தள்ளி வைக்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பினார்.
ஆனால் திட்டமிட்டபடி பொதுக்குழு கூடும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன, இதனால் ஓ.பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் கலந்து கொல்லாமல் புறக்கணிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் இன்று பொதுக்குழு கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்து இருக்கிறார். பொதுகுழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோர்ட்டில் மனு செய்துள்ளார். ஒரு வேளை தடை எதுவும் விதிக்காமல் பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்க கூடும்.
![](https://tn96news.com/wp-content/uploads/2022/06/download-3-3.jpg)
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரை மீறி பொதுக்குழு நடப்பதால் அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறி பொதுக்குழு நடத்த போலீஸ் அனுமதி மறுக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
இதையெல்லாம் மீறி அ.தி.மு.க. பொதுக்குழு கூடினால் மாவட்ட செயலாளர்கள் மொத்தம் 75 பேரில் 64 பேரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாலும் மெஜாரிட்டி பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாலும் அவர் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்.
இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தேர்தல் கமிஷனை நாடி பொதுக்குழு செல்லாது என்று புகார் அளிப்பார்கள். எதிர் தரப்பில் அளிக்கப்படும் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால் பொதுக்குழு முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படலாம்.
மேலும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கோர்ட்டுக்கு சென்று கட்சி சின்னம், கொடியை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்க கோரலாம்.
ஏற்கனவே எம்.ஜி,ஆர்.மறைவுக்கு பிறகு ஜெயலலிதா-ஜானகி அம்மாள் இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக கட்சியின் சின்னம் முடக்கப்பட்டது, கட்சி அலுவலகத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கபட்டது.
அதுபோல் இப்போது நடந்தால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உண்மையான அ.தி.மு.க.யார் தலைமையில் உள்ளது என்பதை தேர்தல் மூலம் நிரூபிக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் ஓரங்கட்டி வைக்கபட்டிருக்கும் சசிகலா, தனக்கு சாதகமாக காய் நகர்த்துவார். சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் தற்போது சசிகலாவிடம் மறைமுக தொடர்பில் இருக்கிறார். இனிமேல் நேரடியாக அவருடன் இணைந்து செயல்படவும் வாய்ப்பு இருக்கிறது.
![](https://tn96news.com/wp-content/uploads/2022/06/SASIKALA.jpg)
அந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்க சசிகலா தீவிர முயற்சி மேற்கொள்வார். அதில் வெற்றி கண்டுவிட்டால் கட்சி அவர் வசம் சென்று விடும். பின்னர் மறுபடியும் அவரே ஒற்றை தலைமை ஆகி விடுவார்.
எனவே இந்த விஷயத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறார்கள்.
–S.K.T.S.திருப்பதிராஜன்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)