கோவில்பட்டி நீதிமன்றத்தில் உலக யோகா தினம்

கோவில்பட்டி வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக நீதிமன்றத்தில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி ஆர். ரத்தினவேல் பாண்டியன், மாவட்ட உரிமையியல் நீதிபதி வி முரளிதரன் நீதித்துறை நடுவர்கள் எம் கடற்கரை செல்வம், பி. பீட்டர், ஏ முகமது சாதிக் உசேன் ஆகியோர் முன்னிலையில் வக்கீல்கள், ஊழியர்கள் யோகாசனம் செய்தனர்.

வழக்கறிஞர்கள் சந்தானம் , சந்திரசேகர், முத்துக்குமார் மற்றும் நீதிபதிகள் ,வழக்கறிஞர்கள். அனைத்து ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் ராஜ் யோக ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் நிறுவனர் ஏ. நாகராஜன் ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜோன்ஸ் இமானுவேல், பூல் பாண்டி , .முருகன் , ஜெய்சங்கர் , மரிக்கொழுந்து ஆகியோர் செய்திருந்தனர்.
