தூத்துக்குடி மாவட்ட ஆணழகன் போட்டி; 151 வீரர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்ட தமிழன் அமெச்சூர் பாடி பில்டிங் மற்றும் பிட்னஸ் அசோசியேஷன் மற்றும் எஸ்.வி.பி.எஸ்.பெல் ஸ்போர்ட்ஸ் சென்டர் இணைந்து நடத்திய தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆணழகன் மற்றும் பிட்னஸ் தூத்துக்குடி 2022- க்கான போட்டிகள் நடைபெற்றது. எஸ்.வி.பி.எஸ். ஜெயசீலி மணியப்பன் குத்துவிளக்கு ஏற்றினார். தூத்துக்குடி தொழிலதிபர் பழரசம் பா.விநாயகமூர்த்தி போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் 151 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியானது உடல் எடை அடிப்படையில் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு கேடயம், பதக்கம், சான்றிதழ் மற்றும் அதோடு சேர்த்து முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 3-வது பரிசாக ஆயிரம் ரூபாய் மற்றும் அனைத்து பிரிவிலும் முதல் 10 வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்தப்போட்டியில் வெற்றி பெற்ற பாலச்சந்தருக்கு இந்த வருடம் மிஸ்டர் தூத்துக்குடி 2022 ம் ஆண்டுக்கான சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது . அவருக்கு தங்க கேடயம், தங்க பதக்கம் , ரொக்க பரிசாக ரூ. 10 ஆயிரம் மற்றும் இரண்டாவது பரிசு பெற்ற லோகேஸ்வரனுக்கு தங்க கேடயம், வெள்ளி பதக்கம் மற்றும் ரொக்க பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.