• February 7, 2025

அ.தி.மு.க. பொதுக்குழு: பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள்

 அ.தி.மு.க. பொதுக்குழு: பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி சென்னையில் நாளை நடைபெறும் உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வந்து உள்ளனர். இந்த நிலையில் நாளை வானகரம் ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார் அல்லது வாக்காளர் அட்டை போன்றவை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுக்குழு உறுப்பினர்கள் மொத்த எண்ணிக்கை 199௦ என்றும் அதில் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பவர்கள் 1892 பேர் என்றும் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பவர்கள் 98 பேர் என்றும் தெரிய வந்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *