தூத்துக்குடி தருவை மைதானத்தில் 62 சுற்று விழிப்புணர்வு ஓட்டம்; காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
தூத்துக்குடி ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள ஈஸி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் இம்மானுவேல் (வயது 62).
இவர் சிறுதானிய உணவு மற்றும் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி தூத்துக்குடி தருவை மைதானத்தில் தனது 62வது பிறந்தநாளை முன்னிட்டு 62 சுற்றுகள் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருடன் அவர் நடத்திவரும் உடற்பயிற்சி அகடாமியின் மாணவர்கள் 4 பேரும் ஓடினர். இவர்கள் மொத்தம் ஓடிய தூரம் 25 கிலோ மீட்டர் ஆகும்.
விழிப்புணர்வு ஓட்டம் ஓடிய இம்மானுவேல் மற்றும் 4 மாணவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.







