கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் வசந்த் ஆகியோருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆர்.சத்யா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் பழனிச்சாமி, […]
சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி, தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகர் மற்றும் முக்கிய நகரங்களில் பா.ஜனதா சார்பில் உன்னாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்ல் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்காக பஸ்நிலையம் அருகே சாலையோரம் பந்தல் அமைத்து அதனுள் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. […]
கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் நடராஜன், மேற்கு மாவட்ட தலைவர் வெள்ளத்துரை பாண்டி, அவைத்தலைவர்கள் வெங்கடசாமி, சாமிய்யா, மாநில துணை தலைவர் நம்பிராஜன், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பாராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தமிழக அரசு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு செஸ் வரி விதித்ததை ரத்து செய்ய வேண்டும். 2020-21-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் […]
10ம்வகுப்பு மற்றும் 12ம்வகுப்பு (2021-2022) தேர்வில் தேர்ச்சி பெற்ற கோவில்பட்டி பள்ளி மாணவ-மாணவிகள் 30பேருக்கு விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மந்தித்தோப்பு ரோட்டியுள்ள தங்கமஹால் திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவுக்கு விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்கத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விஸ்வர்கம மகாஜன சங்கத்தலைவர் பாலமுருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை அவர் வழங்கினர். விஸ்வகர்ம […]
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பொது மக்களுக்கு தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின் கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் 6-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.எனவே, கோவில்பட்டி உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் தினசரி மார்க்கெட் பகுதி, கடலைகார தெரு, செக்கடித்தெரு, இனாம் மணியாச்சி, இந்திரா காலனி, மஞ்சு நகர், […]
கோவில்பட்டி பல்லாக்கு ரோடு பகுதியில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆட்டோவில் இருந்த டிரைவரான கோவில்பட்டி பல்லாக்கு சாலையை சேர்ந்த மாதவன் மகன் தாமசை (வயது 26) பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், ரேஷன் அரிசி மூட்டைகளை மதுரை வழியாக கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. […]
கோவில்பட்டி சுபா நகரில் ஸ்ரீ நித்யகல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜைக்கு பிறகு கோவில் நடை சாத்தப்பட்டது. இதை தொடர்ந்து அர்ச்சகர் வரதராஜ அய்யங்கார் வீட்டுக்கு கிளம்பி சென்றார்.இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த அர்ச்சகர் , கோவில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பதறி அடித்துக்கொண்டு உள்ளே போய் பார்த்தார். சுவாமி சன்னதியில் இருந்த ஐம்பொன் சாமி சிலை திருட்டு போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி […]
கோவில்பட்டி தாலுகா இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-*சமீபகாலமாக உயர்த்தபட்ட எம்.சாண்ட் விலைஉயர்வை வாபஸ் பெறவேண்டும்.*எம்.சாண்ட் விலைநிர்ணயம் செய்யவேண்டும்.*எம்.சாண்ட் விலையை திடீரென உயர்த்திய தனியார் மணல் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.*.எம்.சாண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவதன் மூலம் கட்டிடம் கட்டுவோர், கட்டிட தொழிலாளர்கள், எம்.சாண்ட்லாரி உரிமையாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் காக்கப்படவேண்டும்,.மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜி,பாபு […]
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக சாய்ந்த மின் கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதிக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.எனவே, கோவில்பட்டி உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் நடராஜபுரம் 1 முதல் 9 வரையுள்ள தெருக்களுக்கும், படர்ந்த புளி, கங்கன் குளம், ஆலம்பட்டி ஆகிய பகுதிகளுக்கும், சிட்கோ உபமின் […]
கோவில்பட்டி கதிரேசன் சாலையில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது,முதல் இரண்டு நாட்கள் விக்னேஷ்வர பூஜையை தொடர்ந்து பலவேறு பூஜைகள் நடந்தன. யாகசாலையில் வேள்வி பூஜை. கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தன. மூன்றாம் நாள் காலை 5 மணிக்கு மேல் பல்வேறு பூஜைகள் நடைபெற்று காலை 8.15 மணிக்கு கும்ப பிரயாணம் தொடங்கியது.8.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் தொடங்கி காலை 9.3௦ மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







