உலக புகைப்பட தினம்: கோவில்பட்டியில் புகைப்பட கலைஞர்கள் பேரணி
கோவில்பட்டியில் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நலச்சங்கம் சார்பில் உலக புகைப்படதினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஸ் நிலையம் அருகே உள்ள பயணியர் மாளிகை முன்பிருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.
சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, நகர்மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் , பச்சை கொடியை அசைத்து பேரணியை தொடக்கி வைத்தனர்.




பேரணியில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர், போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்க கவுரவ தலைவர் பிச்சையா, தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் துரைராஜ், பொருளாளர் ராமன், துணை தலைவர் மாரியப்பன், துணை செயலாளர் முருகன் உள்ளிட்ட பலரும் பேரணியில் கலந்து கொண்டனர்.
பயணியர் மாளிகை முன்பிருந்து தொடங்கிய பேரணி, மெயின்ரோடு, புதுரோடும், எட்டயபுரம் ரோடு வழியாக காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது.
முன்னதாக பேரணி தொடக்கத்தில் மூத்த புகைப்பட கலைஞர்களுக்கு நினைவுபரிசு வழங்கி கடம்பூர் ராஜூ கவுரவித்தார். நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மரக்கன்றுகள் வழங்கினார்.







