கோவில்பட்டி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து

மதுரையில் இருந்து சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த மினி லாரியை மதுரையை சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை வேளையில் எட்டயபுரம் தாண்டி திட்டங்குளம் அருகே வந்தபோது எதிரே வந்த பைக்கின் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்தபோது கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி அருகில் உள்ள கால்வாய் ஓடையில் மீது ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது=
இந்த விபத்தில் மினி லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். லாரியில் இருந்த எண்ணெய் பாக்கெட்டுகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
விபத்து நடந்த இடத்தில் அக்கம் பக்கத்தினர் திரண்டனர், அவர்கள் டிரைவர் கணேசனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் சம்பவ இடம் சென்று கவிழ்ந்து கிடந்த மினிலாரியை கிரேன் மூலம் மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
