தென்காசி மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு 144 தடை உத்தரவு; கலெக்டர் அறிவிப்பு
![தென்காசி மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு 144 தடை உத்தரவு; கலெக்டர் அறிவிப்பு](https://tn96news.com/wp-content/uploads/2022/08/download-12-696x560.jpg)
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பரச்சேரி கிராமத்தில் ஆகஸ்டு 20 ந்தேதி சுதந்திர போராட்ட வீரா் ஒண்டிவீரன் 251 -வது வீரவணக்க நிகழ்ச்சியும், செப்டம்பர் 1 ந்தேதி நெற்கட்டும் செவல் கிராமத்தில் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவும் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்ச்சிகளில் இருவரது சிலைகளுக்கும் பல்வேறு அமைப்பினா் சார்பில் மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்த உள்ளூா் மட்டுமன்றி தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் அதிகமானோர் வருவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இன்று ஆகஸ்டு 19 காலை 6 மணிமுதல் செப்டம்பர் 2 -ம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக தென்காசி கலெக்டர் ப.ஆகாஷ் அறிவித்தார்.
அதன்படி , நாளை நடைபெற உள்ள சுதந்திர போராட்ட வீரா் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்ச்சிக்காக தென்காசி மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)