கரு முதல் உயிர் பிரியும் நாள் வரை, நலம் அருளும் திருக்கோவில்கள்
![கரு முதல் உயிர் பிரியும் நாள் வரை, நலம் அருளும் திருக்கோவில்கள்](https://tn96news.com/wp-content/uploads/2022/08/images-2.jpg)
தமிழ்நாட்டில் கரு முதல் உயிர் பிரியும் நாள் வரை நலம் அருளும் திருக்கோவில்கள் பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்
- கரு உருவாக —கரூர் *பசுபதீஸ்வரர் கோவில்
- சுகப் பிரசவத்திற்கு –– திருச்சிராப்பள்ளி *தாயுமானவர் கோவில்
- நோயற்ற வாழ்விற்கு — வைதீஸ்வரன் கோவில், வைதிய லிங்க கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்
- தீரா நோய் தீர —- திருவதிகை திரிபுரம் எரித்த வீரட்டேஸ்வரர் கோவில். குத்தாலம் உத்தர வேதீஸ்வரர் கோவில்
- நவ கிரக தோஷங்கள் நீங்க — திருக்குவளை (திருக் கோளிலி) கோளிலிப் பெருமான் கோவில் உள்ளிட்ட ஏழு சப்த விடங்கத் தலங்களான தியாக ராஜர் கோவில்கள்
- நாக தோஷம் நீங்க — புதுக் கோட்டை அருகே பேரையூர் நாக நாதர் கோவில், கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம் *நாக நாதர் கோவில் திருப் பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில் மற்றும் எல்லா நாக நாதர் நாகேஸ்வரர் கோவில்கள்.
- பித்ரு சாபம் தோஷம் நீங்க — திருத்திலதைப்பதி மதி முத்தர் கோவில்
- சிறந்த ஞானத்திற்கு —–திருப்பெருந்துறை *ஆவுடையார் கோவில், சீர்காழி பிரம்ம புரீஸ்வரர் கோவில், ஞானஸ்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்
- நல்ல கல்விக்கு — திரு இன்னம்பர் எழுந்தறி நாதர் கோவில், மதுரை சொக்க நாதர் கோவில்
- கலைகளுக்கு —— சிதம்பரம் நடராஜர் கோவில்
- காரிய வெற்றி பெற —- எட்டு வீரட்டேஸ்வரர் கோவில்கள்
- எண்ணம் ஈடேற —– திருவெண்காடு வெண்காட்டீசர் கோவில்
- செல்வம் சேர — *நாகை காரோணம் காரோணேஸ்வரர் கோவில், திருப்புகலூர் கோணப்பிரான் கோவில், திருவீழிமிழலை வீழியழகர் கோவில், திருவாவடுதுறை கோமுத்தீஸ்வர் கோவில், விருத்தாச்சலம் விருத்த கிரீஸ்வரர் கோவில், திருக்கடையூர் கால சம்ஹார வீரட்டேஸ்வரர் கோவில், அசிரில் கரை அழகாம்புத்தூர் படிக்காசுப் பரமர் கோவில்.
- காணாமல் போனவை கிடைக்க —- திருவானைக்கா ஜம்புகேவஸ்வரர் கோவில் , திருமுருகன் பூண்டி முருக நாதர் கோவில்.
- பதவி, அரச பதவி, உயர் பிறவி பெற —- காஞ்சிபுரம் தேவ சேனாபதீஸ்வர் கோவில், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில்
திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாக ராஜர் கோவில் (எலி, சிலந்தி, குரங்கு, மனிதனாக பிறந்து உலகம் ஆள அருள் செய்த ஈஸ்வரன் கோவில்கள்) - திருமணத் தடை நீங்க — திருமருகல் மாணிக்க வண்ணர் கோவில்
- பிரிந்த தம்பதியர் ஒன்று சேர —- செய்யாத்த மங்கை அயவந்தி நாதர் கோவில்
- மலட்டுத் தன்மை நீங்கிக் குழந்தை உண்டாக – செய்யாறு திருவோத்தூர்
வேத புரீஸ்வரர் கோவில், திருவெண்காடு வெண்காட்டீசர் கோயில் - கடன் தீர —- திருவாரூர் தியாக ராஜர் கோயில், திருச்சேறைசார பரமேஸ்வரர் கோயில் இவை சீனிவாசப் பெருமாள் வழிபட்டுக் கடன் தொல்லை நீங்கிய தலம் (கடன் வாங்காமல் வாழ்வதுதான் நல்ல வாழ்க்கை)
- பில்லி சூனியம் ஏவல் சாபம் பேய் பித்தம் விலக —– திருக்குற்றாலம் குறும்பலா நாதர் கோவில், திருவாலங்காடு ஆலங்காட்டீசர் கோவில்
- தாவரம் பூ கருகாமல் செழிப்புடன் வளர –– திருக் கருகாவூர் முல்லை வன நாதர் கோவில் (தலவரலாறு தேவாரத்தில் உள்ளது.
- மழை பொழிய, பயிர் வளர —– மீச்சூர் மேக நாதர் கோவில். இந்த கோவிலுக்கும் லலிதாம்பிகைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆகம விதிக்கு மாறுபட்டு
அமைந்துள்ள இந்த அம்மன் சந்நிதி தற்கால சந்நிதி. - பகையை வழக்குகளை வெல்ல –– மதுரை சொக்க நாதர் கோவில்
- சகல பாவமும் தீர —- பாப நாசம் பாப நாசர் கோவில்
- கண் பார்வைக்கு — காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் , திருவாரூர் தியாக ராஜர் கோவில், திருவீழிமிழலை வீழிநாதர் கோவில், திருக்காளத்தி காளத்தி கிரீசர் கோவில், திரு மயிலை வெள்ளீஸ்வரர் கோயில்
- பாதுகாப்பான பயணத்திற்கு —– விரிஞ்சிபுரம் வழித் துணையப்பர் கோவில்
- அச்சம் குழப்பம் கவலை மரண பயம் நீங்கி மன நிம்மதிக்கு —- திருவதிகை புரம் எரித்த வீரட்டேஸ்வரர் கோவில், திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோவில், திரு வலிவலம் மனத் துணையப்பர் கோவில், திருக் கடையூர் கால சம்ஹார வீரட்டேஸ்வரர் கோவில், தருமபுரம் யாழ் மூரி நாதர் கோவில், திருவாஞ்சியம் வாஞ்சி நாதர் கோவில், சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் தண்டீஸ்வரர் கோவில் மற்றும் யமன் சிவ பூஜை செய்த அத்தனைக் கோவில்களும்.
- விபத்து நீங்க, உயிர் பிழைக்க —- ஆலங்குடி, ஆடுதுறை, திருப் பழனம் ஆபத் சகாயேஸ்வரர் கோவில்கள்
- நீண்ட ஆயுள் உண்டாக — இறந்தவர் மீண்டும் உயிர் பெற்று வாழ்ந்த திருக்கடையூர் கால சம்ஹார வீரட்டேஸ்வரர் கோவில், திருக்கொற்கை காம தகன வீரட்டேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாக ராஜர் கோவில், திருமருகல் மாணிக்க வண்ணர் கோவில், திருச் செங்காட்டங்குடி கணபதீஸ்வரர் கோவில், திருமயிலை கபாலீஸ்வரர் கோவில், கரூர் பசுபதீஸ்வரர் கோவில், திருபுன்கூர் சிவலோக நாதர் கோவில்.
- சிறந்த பிரம்மச்சர்ய சந்நியாச வாழ்க்கைக்கு —- திருக் குறுக்கை காம தகன வீரட்டேஸ்வரர் கோவில், திருப்பெருந்துறை ஆளுடையார் கோவில்
- இனிய முறையில் உயிர் பிரிய —– திருப் புகலூர் கோணப்பிரான் கோவியில், திருவஞ்சைக் களம் அஞ்சைக் களத்தப்பர் கோவில்
- மீண்டும் பிறவாத முக்திக்கு —– திருப்பெருந்துறை ஆளுடையார் கோவில், மதுரை சொக்க நாதர் கோவில், ஆச்சாள் புரம் சிவலோகத் தியாகேசர் கோவில், திருவதிகை புரம் எரித்த வீரட்டேஸ்வரர் கோவில், திருக்கோவிலூர் அந்தகாசுர வத வீரட்டேஸ்வரர் கோவில்
எந்த வாசல் வழியாக நுழைந்தாலும் வலமாகச் சென்று மூலஸ்தானருக்கு நேர் எதிரே உள்ள நந்தியை வணங்கி அனுமதி பெற வேண்டும். உதாரணமாக மதுரை சுந்தரேசர் கோயிலில் கொக்க லிங்கப் பரம்பொருளுக்கு நேர் எதிரே பிரகாரத்தில் நந்தி மண்டபத்தில் உள்ள நந்தியை வணங்கி அனுமதி பெற வேண்டும். இது கல் மாடு தானே இதற்கு என்ன தெரியப் போகிறது என்று செயல்பட்டால் ஈஸ்வரனும் கல்லாகத் தான் இருப்பார். கடவுளாக அருள் பொழிய மாட்டார். ஒரு பலனும் உண்டாகாது. சிவ நினைவோடு சிவ பரம்பொருளை மட்டுமே வழிபட்டால்தான் பலன் உண்டாகும்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)