`தந்தையை அவமானப்படுத்தியதால் கொலை செய்தேன்’- கட்டிட தொழிலாளி கொலையில் கைதானவர் வாக்குமூலம்

 `தந்தையை அவமானப்படுத்தியதால் கொலை செய்தேன்’- கட்டிட தொழிலாளி கொலையில் கைதானவர் வாக்குமூலம்

முத்துராஜ்

கோவில்பட்டி புதுக்கிராமம் அருகே சிவாஜி நகரை சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் பாலமுருகன்(வயது 3௦). கட்டிட தொளிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு ஆளானவர்
இந்த நிலையில் பாலமுருகனின் தந்தை பெருமாள்சாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரிடம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த வடிவேலு மகன் முத்துராஜ்(39) என்பவர் ரூ.1௦ ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாலமுருகனை முத்துராஜ் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி முத்துராஜை தேடினர்.
தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு பாபநாசத்தில் பதுங்கி இருந்த முத்துராஜை பொறி வைத்து பிடித்து கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையின் போது முத்துராஜ் அளித்த வாக்குகூலம் வருமாறு:-
நான் பாலமுருகன் என்பவரிடம் ரூ.1௦ ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன். அதை திருப்பி கொடுத்த பிறகும் அடிக்கடி அவர் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.
மேலும் வீட்டிக்கு வந்து எனது தந்தை வடிவேலுவை அவமானப்படுத்தியதாலும் ஆத்திரம் அடைந்தேன்,
இதனால் அவரை சந்தித்து சத்தம் போட சென்றபோது மது போதையில் இருந்த பாலமுருகன் என்னையும் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டார்.
இதனால் ஆவேசத்தில் அவரை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டேன்.
இவ்வாறு முத்துராஜ் வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார்.
இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *