கோவில்பட்டியில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

கோவில்பட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 78-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. பழைய பஸ் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் கே.காமராஜ் தலைமையில் பொருளாளர் காமராஜ் திருப்பதிராஜா இனிப்பு வழங்கினார். மாவட்ட செயலாளர் பிரேம்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரிமுத்து, எஸ்.சி.மற்றும் எஸ்.டி.பிரிவு மாநில தலைவர் அருண்பாண்டியன், கோவில்பட்டி நகர தலைவர் பங்காருசாமி, துணை தலைவர் ராஜசேகர், ஐ.என்.டி.யு.சி.சுந்தரராஜ், வேல்சாமி, கோபாலகிருஷ்ணன், ஜோசுவா, அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் காளிதாஸ், மனிதஉரிமை பிரிவு மாவட்ட துணை தலைவர் சங்கரமைக்கிள்,இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சண்முகவேல், பழனிசாமி, நகர துணை தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
