கோவில்பட்டி மங்கள விநாயகர் கோவிலில் இருந்து மந்திதோப்பு செல்லும் சாலையை விரிவுபடுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு நகர துணை செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் சரோஜா,துணை செயலாளர் அலாவுதீன், தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேது […]
தேசிய கல்வி கொள்கை 2020 ஐ திரும்ப பெறவேண்டும், தன பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்த செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சாரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது, ஒவ்வொரு கல்வி மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி, சாத்தான்குளம் ஆகிய கல்வி மாவட்ட தலைநகரங்களில் நடந்தது, கோவில்பட்டி பழைய பஸ்நிலையம் முன்பு […]
கோவில்பட்டியை அடுத்துள்ள கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கணேசன் (வயது 41) .இவர் தண்ணீர் டிராக்டர் டிரைவராகவும், ஆட்டோ டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். கோவில்பட்டி வீர வாஞ்சி நகரில், குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு, ஆலம்பட்டி கண்மாயில் பிணமாக வீசப்பட்டுள்ளார். இது பற்றி நேற்று கோவில்பட்டி மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு […]
இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்து இருக்கிறது, இதையொட்டி கோவில்பட்டியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. காந்தி மண்டபம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் திருப்பதி ராஜா ,மாநில துணை துணைத்தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வைத்தனர்இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி 2024 நாடாளுமன்ற […]
கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் விற்பனை நிலையமான ஞானமலர் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.இந்த பங்க்கில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் அளவு மற்றும் தரத்தை வாடிக்கையாளர்களே சரிபார்த்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம் நடந்தது. கோவில்பட்டி தாசில்தார் சுசிலா முகாமை தொடங்கி வைத்தார்.பெட்ரோல் மற்றும் டீசலின் தரத்தை தாசில்தார் முன்னிலையில் வாடிக்கையாளர்கள் சோதனை செய்து பார்த்தனர், அவர்களுக்கு சோதனை செய்யும் முறை பற்றி இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தினர் விளக்கினர்.அதன்படி பல வாடிக்கையாளர்கள், […]
கோவில்பட்டி அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 45). இவர் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளராக செயல்பட்டு வந்தார். மேலும் பழைய சாக்கு வியாபாரம் செய்து வந்தார்.இவர் இன்று மாலை தனது வீட்டிலிருந்து கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மந்திதோப்பு சாலையில் , எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பெருமாள்சாமி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கைபட்ட அவருக்கு முதலுதவி […]
கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-அரசியல் அமைப்புச் சட்டம் நீடித்து நிலைக்க வேண்டும் என்றால் அரசியல் சட்டத்தை ஏற்று அதை முறையாக அமலாக்க கூடிய நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சி ஆட்சிக்கு வந்தால் அச்சட்டம் நிலைத்து நிற்கும் .2014 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசால் அரசியல் சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பு அற்றது. மதச்சார்பின்மை ஜனநாயகம் கூட்டாட்சி சுய […]
திருக்கார்த்திகை தினமான இன்று கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் முன்புறம் விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தினர் மாவட்ட செயலாளர் காளியப்பன் முன்னிலையில், திருக்கோவில் திருமடங்கள் மாவட்ட இணை அமைப்பாளர் தளவாய்ராஜ் தலைமையில் நெய்விளக்கு ஏற்றி பிரார்த்தனை நடத்தினார்கள்.தமிழகத்தில் இனிமேல் எந்த ஒரு இந்து கோவிலும் எவ்வித காரணமும் கூறி அகற்றப்படாமல் இருக்க செண்பகவல்லி அம்மனை வேண்டி நடந்த இந்த பிரார்த்தனையில் பா.ஜ.க.மாவட்ட பொதுசெயலாளர் வேல்ராஜா, பிரசாரபிரிவு மாவட்ட தலைவர் லட்சுமணக்குமார், ABGP மண்டல ஒருங்கிணைப்பாளர் சுதாகரன், விஷ்வ […]
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்ட்டியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் கட்சியின் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன், நகர செயலார் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்,
தேசிய அளவில் 32 -வது சப் ஜூனியர் மகளிர் கபடி போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ளது. இந்த கபடி போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழக சப் ஜூனியர் வீராங்கனைகள் அணி தேர்வு சேலத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இந்த தேர்வில் கோவில்பட்டி மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியில் விளையாடும் மாணவி கற்பகவள்ளி தமிழ்நாடு மகளிர் அணிக்காக தேர்வாகியுள்ளார்.கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பசாமி என்பவரின் மகளான கற்பகவள்ளிக்கு தூத்துக்குடி […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







