கோவில்பட்டி மார்க்கெட்டில் விரைவில் கடைகளை இடிக்க வேண்டும்; 5-வது தூண் அமைப்பு மனு
கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட் சீரமைக்கப்படுவதற்கான பணிகளை தொடங்கவுள்ளது.. இதற்காக தற்காலிகமாக தினசரி சந்தையை மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கால அவகாசம் கேட்டும் சில கடைக்காரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைகால தடை உத்தரவு வாங்கி இருக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க இன்று காலை திடிரென நகராட்சி அலுவலர் வாடகை செலுத்தவில்லை, கடந்த 26ந்தேதி கடையை காலி செய்ய சொல்லி செய்யவில்லை என்று கூறி கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகளை தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு எழுந்தது பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து சீல் வைக்கப்படுவது நிறுத்தப்பட்டது. மேலும் கடைக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க பிரச்சினை ஏற்படும் என்று தெரிந்து இருந்தும் நகராட்சி அலுவலர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கமால் இருந்தது ஏன் என்பது தெர்யவில்லை.
அது மட்டுமல்ல மேல் அதிகாரிகள் யாரும் வரமால் இருந்ததன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை…எடுத்த நடவடிக்கை சரி என்றால் அந்த சீலை அகற்றமல் இருந்து இருக்க வேண்டும்…
தினசரி சந்தை விவகாரம் தொடர்பாக கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த கையெழுத்து இயக்கத்தினை சீர் குலைக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிடப்பட்ட நாடகமா? என்ற கேள்வியும் எழுகிறது..
எனவே நகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து தினசரி சந்தை சீரமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது,
இந்த நிலையில் இன்று கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் தினசரி சந்தையை இடித்து விரைவில் சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என்று – 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் சமூக ஆர்வலர்கள் ராஜேஷ் கண்ணா, மாரிமுத்து ஆகியோர் கோட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்