கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் 3 கடைகளுக்கு சீல்; வியாபாரிகள் மறியல்
கோவில்பட்டி நகராட்சி கட்டுப்பாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் நெருக்கடி அதிகரித்து இருப்பதால் தினசரி மார்க்கெட்டில் ரூ.6.87 கோடி செலவில் புதிதாக கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
இதனால் இங்குள்ள கடைகளை காலி செய்து தரும்படி வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீசு அனுப்பியது. மேலும் புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை மாற்று இடம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது,
நகராட்சி ஆணையாளர் ராஜாராம், கடந்த ஜனவரி 26-ந்தேதி
முதல் நகராட்சி தினசரி சந்தையில் உள்ள கடைகள் புதிய பஸ் நிலையத்தில் செயல்படும் என்றும் புதிய கடைகள் கட்டிமுடிக்கும் வரை அங்கு தான் செயல்பட வேண்டும் என்றும் அறிவித்தார், ஆனால் அவரது உத்தரவுப்படி மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை காலி செய்யவில்லை. மாற்று இடத்துக்கும் செல்லவில்லை.
இதற்கிடையே சில வியாபாரிகள் கோர்ட்டை நாடி இடைக்கால தடை உத்தரவு பெற்றனர். இடைக்கால தடை உத்தரவு பெற்றவர்கள் தவிர மற்றவர்களின் கடைகளுக்கு சீல் வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
இன்று காலை 10.30 மணி அளவில் மார்க்கெட் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது,. அப்போது வருவாய் அதிகாரி தலைமையில் தனி குழுவினர் அங்கு சென்று சட்டவிரோதமாக 3 கடைகளுக்கு சீல் வைத்தனர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மற்ற கடைக்காரர்கள் கொந்தளித்தனர். அனைவரும் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்,.
மேலும் தங்கள் கடைகளை மூடி விட்டு காலை 11 மணி அளவில் மார்க்கெட் நுழைவு வாசலில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். .இப் போராட்டத்தில் கருத்தரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் பொருளாளர் செல்லத்துரை என்ற செல்வம், தமிழ்நாடு காமராஜர் பேரவை தலைவர் நாஞ்சில் குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் எஸ் ஆர் பாஸ்கரன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் காளிதாஸ், கலைச்செல்வன் உட்பட வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்
சீல்வைத்த கடைகளை திறந்து விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர், இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர், அதிகாரிகள் நேரில்
வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் மற்றும் நிர்வாகிகள், பூட்டிய கடைகளை திறக்கவேண்டும் என்ற நிபந்தனையை வலியுறுத்தினார்கள். நீண்ட நேர
விவாதத்துக்கு பிறகு சீல் வைக்கப்பட்ட கடைகள் திறக்கப்பட்டன.
வியாபாரிகளின் பிரதான கோரிக்கையான நகராட்சி தினசரி சந்தை இடமாற்றம் மற்றும் புதிய கட்டுமானம் குறித்து அனைத்து கட்சிகள் வியாபாரி சங்கங்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நடத்த வேண்டும் புதிய கட்டுமானம் குறித்த வரைபடம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் சந்தை இடமாற்றம் செய்யப்படும் இடத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்ற கோரிக்கையை கேட்ட நகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தனர்,
இதை தொடர்ந்து பகல் 12.15 மணி அளவில் போராட்டம் வாபஸ்
பெறப்பட்டது. வியாபாரிகள் மீண்டும் கடைகளை திறந்தனர்.
வியாபாரிகளின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது,.
https://www.facebook.com/100001031211215/videos/703004834619443/