கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டை புதுப்பித்து கடைகள் பொது ஏலம் ; மக்கள் விருப்பம் நிறைவேறுமா?

 கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டை புதுப்பித்து கடைகள் பொது ஏலம் ; மக்கள் விருப்பம் நிறைவேறுமா?

கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கிறது.. பல ஆண்டுகளாக அதிகாரிகள் கண்காணிப்பில் இருந்த இந்த மார்க்கெட் பல்வேறு முறைகேடுகளை கொண்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளுக்கு பாதிக்கு பாதிக்கு பாதி அதிகமான ஆக்கிரமிப்பு கடைகள் பெருகி விட்டன, நகராட்சி வாடகை கடைக்காரர்கள் கடையின் முன்பகுதியை வேறு நபருக்கு மேல் வாடகைக்கு விடுவதும், கடைக்கு வாடகை செலுத்திவிட்டு இன்னொருவருக்கு  அதிக பணம் பெற்றுக்கொண்டு விட்டு செல்வதும் நடந்து இருக்கிறது,

இதன் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த பலரும் தனித்தனியாக கடை நடத்துகிறார்கள். கடைக்குள் காலியாக வைத்துவிட்டு பொருட்களை கடைக்கு வெளியே வைத்து விற்பனை செய்வோரே அதிகம். அந்த அளவுக்கு ஆக்கிரமிப்பு பெருகிவிட்டது,

மார்க்கெட்டுக்குள் நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்புக்கு அதிகாரிகள் துணை போன காரணத்தினால் அதற்கும் வாடகை வசூல் நடந்துள்ளது,

நடைபாதையில் வியாபாரம் செய்ய மாதந்தோறும் ரூ 5000 முதல் 8000 வரை கமிஷன் பெற்று கொள்வதாகவும்… போலி ரசீது மூலமாக வாகன கட்டணம் வசூல் செய்வதாகவும்  வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தற்போது நகராட்சி நிர்வாகம் இருக்கும் கடைகளை இடித்துவிட்டு புதிதாக கடைகள் கட்டினால் பாதி பேருக்கு மேல் கடைகள் கிடைக்காது. ஏற்கனவே நகராட்சி பட்டியலில் இருக்கும் நபர்களுக்கு தான் புதிய கடைகள் கிடைக்கும் என்பதால் ஒரு தரப்பினர் கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிகிறது.   

எனவே முறைகேடுகள் பெருகி இருக்கும் கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து புதிதாக கடைகள் கட்ட வேண்டும். பின்னர்  முறைகேடுகள் இல்லாமல் கடைகளை பொது ஏலம் விட வேண்டும்…

மக்களுக்கும்… வியாபாரிகளிக்கும் பயன்படும் வகையிலும் , நகராட்சிக்கு வருவாய் வரும் வகையில் புதிய தினசரி சந்தை அமைய வேண்டும் என்பது தான் மக்கள் விருப்பம்…

* கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில்….. கடைகளுக்கு தற்போது வசூலிக்கப்படும் வாடகை குறித்து மக்களுக்கு தெரியும் வகையில்  நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும்….

* தினசரி சந்தையில் ஏலம் எடுத்தவர்கள் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும்…

* எத்தனை பெயர் ஏலம் எடுத்தவர்களிடமிருந்து பெயர் மாற்றம் செய்துள்ளனர்… விபரங்களை தெரியப்படுத்த வேண்டும்…

* எத்தனை பேர்  சரியாக வாடகை செலுத்தாமல்   கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.. .. மேலும் வாடகை பாக்கி வைத்துள்ளவர்கள் விபரங்கள் குறித்தும் நகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக…. பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதியதாக கட்டப்படும் சந்தையில்  குறைவாக கடைகள் கட்டப்பட்டால் தங்களுக்கு அதிக கடைகள் கிடைக்காது என்று அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் சிலரை  கையில் வைத்து கொண்டு, புதிய பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாக அங்குள்ள வியாபாரிகள்.. கூறுகின்றனர்.

புதுப்பிக்கப்படும் தினசரி சந்தையில் கடைகள் பொது ஏலம் விடப்பட்டால் புதிய மொத்த வியாபாரிகள் பலர் வர வாய்ப்பு உள்ளது..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *