மாவட்ட ஆக்கி அணிகள் தேர்வு குறித்து ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம், செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி ஆகியோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- சப் ஜூனியர் பெண்கள் மாநில சாம்பியன் போட்டி புதுக்கோட்டையில் மே 5 முதல் 8 வரை நடக்கிறது.மாநில சீனியர் ஆண்கள் சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் மே 10 முதல் 14 வரை ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக போட்டிகள் நடைபெற உள்ளன. […]
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். ஆலையில் உள்ள 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக […]
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் இணையதளம் மூலம் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. .நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி தலைமை தாங்கினார்.பேரூர் செயலாளர் கோட்டைச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ் முகாமை தொடங்கி வைத்தார். https://members.dmdkparty.com/ இணையதளம் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். மாவட்ட துணைசெயலாளர் ராஜபாண்டி, மாவட்ட தொழிற்சங்க தலைவர் மினாட்சிசுந்தரம்,மாவட்ட பொறியாளர் அணி துணைசெயலாளர் கிரிதரன்,மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் பிச்சைமணி, சமூகவலைதள அணி சிவமுருகன், ஒன்றிய நிர்வாகிகள் […]
மதிமுக முன்னாள் எம்.பி. ரவிசந்திரன் மகள் ஸ்ரீரேகா –திவாகர் திருமணம் கோவில்பட்டி ராம் அனுமான் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு திருமணத்தினை நடத்தி வைத்தார். மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி.மற்றும் மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில் கூறியதாவது:- திமுகவில் 30 ஆண்டுகள், மதிமுகவில் 31 ஆண்டுகள் என 61 ஆண்டுகள் அரசியல் மற்றும் […]
கோவில்பட்டியை அடுத்த சாத்தூர் பகுதியில் இருந்து இன்று மதியம் 1.30 மணி அளவில் பட்டாசு ஆலையில் இருந்து புஸ்வானம் ஏற்றிக்கொண்டு சிவகாசி நோக்கி ஒரு சரக்கு ஆட்டோ சென்றது. மேட்டமலை என்ற பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாசல் பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்க தடுப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் சரக்கு ஆட்டோவும். சிவகாசியில் இருந்து சாத்தூர் நோக்கி வந்த இன்னொரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ்சும் நேருக்கு நேர் […]
கோவில்பட்டி புது கிராமம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனி பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன் தலைமையில் காவலர் கழுகாசலமூர்த்தி மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் செசிலின் வினோத், முத்துராமலிங்கம், அருணாச்சலம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். போலீசார் சென்றதும் சுடுகாடு பகுதியில் நின்றிருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஒரு சிலரை போலீசார் சுற்றி வளைத்து 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சுடுகாட்டுப் பகுதியில் […]
கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று சனிக்கிழமை ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது மாலை 4:20 மணிக்கு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு ராகு பகவானும் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு கேது பகவானும் பெயர்ச்சியாகின்றனர். ‘அதன் அங்கமாக மாலை 3 மணி அளவில் அபிஷேக பூஜைகள் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 4.20 மணிக்கு தீபாராதனை நடைபெறும் . மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய […]
இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் சார்பாக உலக புத்தக தினம் கோவில்பட்டி மைக்ரோ பாயிண்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடைபெற்றது. உலக புத்தக தினம் மற்றும் புத்தகங்கள் வாசிப்பு குறித்து அரசு பள்ளி உதவி தமிழாசிரியர் முருகசரஸ்வதி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் இந்திய கலாச்சார நட்புறவுக் கழக மாநில செயலாளர் க. தமிழரசன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகி நல்லையா, உலகத்திருக்குறள் கூட்டமைப்பு முத்துச்செல்வம், காங்கிரஸ் கட்சி அருள்தாஸ், பிஎஸ்என்எல் துரைராஜ், ஐ என் டி […]
கோவில்பட்டி தாலுகா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 7 ஊராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் தொடங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமை தாங்கினார். மாதர் சங்க நகர செயலாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரியை சந்தித்து அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:- கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மந்தித்தோப்பு, பாண்டவர் […]
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கு கோவில்பட்டியில் பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தி மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அண்ணா பஸ் நிலையம் அருகே பயணியர் விடுதி முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு நகர பாஜக தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் மகாலட்சுமி வேல்முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜா, மாவட்ட பொருளாளர் கணேஷ், பட்டியல் அணி மாநில செயலாளர் சிவந்திநாராயணன் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







