கோவில்பட்டியில் உலக புத்தக தின விழா

இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் சார்பாக உலக புத்தக தினம் கோவில்பட்டி மைக்ரோ பாயிண்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடைபெற்றது.
உலக புத்தக தினம் மற்றும் புத்தகங்கள் வாசிப்பு குறித்து அரசு பள்ளி உதவி தமிழாசிரியர் முருகசரஸ்வதி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் இந்திய கலாச்சார நட்புறவுக் கழக மாநில செயலாளர் க. தமிழரசன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகி நல்லையா, உலகத்திருக்குறள் கூட்டமைப்பு முத்துச்செல்வம், காங்கிரஸ் கட்சி அருள்தாஸ், பிஎஸ்என்எல் துரைராஜ், ஐ என் டி யு சி. ராஜசேகர்,
மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ், பகத்சிங் ரத்ததானக் கழகம் காளிதாஸ், லட்சுமணன், தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகப்பாண்டியன், மைக்ரோ பாயிண்ட் கம்ப்யூட்டர் நிறுவுனர் ஆம்ஸ்ட்ராங், புளுஆன் நிறுவன சேர்மன் ரோஜர் ஆப்ரின், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


