• April 27, 2025

கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று மாலை ராகு கேது பெயர்ச்சி விழா

 கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று மாலை ராகு கேது பெயர்ச்சி விழா

கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று  சனிக்கிழமை ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது மாலை 4:20 மணிக்கு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு ராகு பகவானும் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு கேது பகவானும் பெயர்ச்சியாகின்றனர்.

‘அதன் அங்கமாக மாலை 3 மணி அளவில் அபிஷேக பூஜைகள் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 4.20 மணிக்கு தீபாராதனை நடைபெறும் .

மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய  ராசிக்காரர்கள் ஆவர்.

மேற்கண்ட ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம். கருப்பு உளுந்து மற்றும் காணப் பயிர் வாங்கி வந்து தானமாக அளித்து பரிகாரம்  செய்து வழிபடலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராகு கேது பெயர்ச்சியின் மூலம் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் இறை வழிபாடு மிக மிக அவசியம். ராகு கேது என்பவர்கள் ஒரு நிழல் கிரகங்கள். நிழலை போல நம்மை தொடரும். நாம் செய்த நல்லது கெட்டதை எல்லாம் கவனித்து வைத்துக் கொண்டு, அந்தந்த நேரத்திற்கு பலா பலன்களை நமக்கு கொடுக்கும்

நீங்கள் எவ்வளவு நன்மை செய்கிறீர்களோ, ராகு கேது அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுக்கு நன்மையை செய்யும். எவ்வளவு தீங்கு செய்கின்றோமோ அதே போல ராகு கேது உங்களுக்கு தீங்கை கொடுத்து விடும். இது ராகு கேதுவுக்கு மட்டும் பொருந்தாது. எல்லா கிரகங்களும் இதைதான் செய்கிறது. இதை புரிந்து கொண்டாலே மனிதர்கள் வாழ்க்கையில் கஷ்டப்படாமல் வாழலாம்

இந்து மதத்தில்  நாக வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெருமாள், சிவன், அம்பாள், முருகர், விநாயகர் எல்லா தெய்வங்களிடத்திலும் நாம் இந்த சர்ப்பத்தை பார்க்கலாம். –

எனவே  சர்ப்பத்தோடு இருக்கும் எந்த இறைவனை நீங்கள் தினமும்  வழிபாடு செய்தாலும் ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. அதேபோல தினமும் சர்ப்பத்தின் இந்த 8 பெயர்களை (வாசுகி, ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன்) உச்சரித்து விட்டால் சர்ப்ப தோஷம், ராகு கேது தோஷம் உங்களை எதுவுமே செய்யாது.

அதேபோல ராகு கேதுவுடைய மந்திரத்தை நாம் உச்சரிக்கும் போது, அவர்களால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். இந்த மந்திரங்களையும் தினந்தோறும் உச்சரிக்கலாம். முடியாதவர்கள் வரும் சனிக்கிழமை மட்டுமாவது ராகு கேது பெயர்ச்சி அடையக்கூடிய நேரத்தில் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். தோஷங்கள் விலகிவிடும்.

ராகு காயத்ரி: நாக த்வஜாய வித்மஹே!

பத்ம ஹஸ்தாய தீமஹி!

தந்நோ ராகு ப்ரசோதயாத்!

கேது காயத்ரி: அச்வ த்வஜாய வித்மஹே!

சூல ஹஸ்தாய தீமஹி!

தந்நோ கேது ப்ரசோதயாத்!

இவ்வளவு மந்திரங்கள் நாமங்களை சொல்ல முடியாது என்றாலும் பரவாயில்லை. “ஓம் ராகுவே நமஹ, ஓம் கேதுவே நமஹ” என்ற இந்த இரண்டு வரி மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தாலே போதும். ராகு கேது தோஷத்தால் உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு பாதிப்பும் வராது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *