மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் மற்றும் சீனியர் ஆண்கள் ஆக்கி அணிகள் தேர்வு; கோவில்பட்டியில் நடக்கிறது

மாவட்ட ஆக்கி அணிகள் தேர்வு குறித்து ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம், செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி ஆகியோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சப் ஜூனியர் பெண்கள் மாநில சாம்பியன் போட்டி புதுக்கோட்டையில் மே 5 முதல் 8 வரை நடக்கிறது.மாநில சீனியர் ஆண்கள் சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் மே 10 முதல் 14 வரை ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக போட்டிகள் நடைபெற உள்ளன.


இப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஆக்கி அணிகள் கலந்து கொண்டு விளையாட இருப்பதால் மாவட்ட அணி தேர்வு, ஜூனியர் பெண்கள் அணி வருகிற செவ்வாய்க்கிழமை 29 .4 .2025 காலை 7 மணி அளவில் கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் மாவட்ட அணி தேர்வு நடைபெற இருக்கிறது.
தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வீராங்கனைகள் 1.1.2009க்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவராகவும் அல்லது தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளியில் பயின்று வருபவராகவும் இருக்க வேண்டும் தகுதியான வீராங்கனைகள் பிறப்புச் சான்றிதழ், ஆதார் , நகல் கொண்டு வரவும்.

மாவட்ட சீனியர் ஆண்கள் அணித் தேர்வு புதன்கிழமை 30 .4 .2025 காலை கோவில்பட்டி SDAT செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடைபெற இருக்கின்றது. சீனியர் ஆண்கள் அணி தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு வயது வரம்பு கிடையாது தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி , அல்லது தூத்துக்குடி மாவட்டத்தில் பணி செய்பவராகவோ இருக்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு 9443190781 தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
