4 ஊராட்சிகளில் சமூகதணிக்கை சிறப்பு கிராம சபைகூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை எப்போதும் வென்றான் கிராம ஊராட்சி, கூட்டுடன்காடு கிராம ஊராட்சி, விட்டிலாபுரம் கிராம ஊராட்சி, புதுக்குளம் ஆகிய கிராம ஊராட்சிகளில் 6ம் தேதி முதல் 13ம்தேதி வரை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையினை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.கிராமசபை கூட்ட நடவடிக்கைகளை நிர்ணய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் எப்போதும் வென்றானில்நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார்.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரி, சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர்கள் ரமேஷ், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டாரவள பயிற்றுநர் முத்துமுருகன் அனைவரையும் வரவேற்றார்.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் ஜெயராஜ் கலந்து கொண்டு சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்தார்.சமூகத்தணிக்கை அறிக்கை மீது கிராம சபையில் விவாதிக்கபட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
வட்டார வள பயிற்றுநர் ஆறுமுகசாமி சமூகதணிக்கை கிராம வள பயிற்றுநர்கள் தனலட்சுமி, ஜெயபாலா, முத்து செல்வி, ராமலட்சுமி, சண்முக பிரியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்னலட்சுமி, உள்பட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் வேல்சாமி நன்றி கூறினார்.

இதே போல் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டுடன் காடு, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் விட்டிலாபுரம், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம்புதுக்குளம் கிராம ஊராட்சியில் சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.







