இலுப்பையூரணி கிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பாக வடக்கு இலுப்பையூரணி கிராமத்தில் மாணவரணி மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் புதுக்கிராமம் செந்தூர் மஹாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமை தாங்கினார்.மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
ஒன்றிய அவைத் தலைவர் பொன்னுச்சாமி,மாவட்ட பிரதிநிதி அசோக்குமார், வழக்கறிஞர் ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் உத்ரகுமார்,துணை அமைப்பாளர் அருண்குமார்,கிளைச் செயலாளர் ஜெயக்குமார்,இளைஞர் அணி முனீஸ்வரன்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன்,மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
