கோவில்பட்டி கோவிலில் வைகாசி சனி சிறப்பு பூஜை
கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள ஸ்ரீஅலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் சன்னதியில் வைகாசி சனி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி இன்று காலை 8 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடினர்.
பூஜைகளை சுப்பிரமணிய சாமி, செல்வம் சாமி செய்தனர்.கோவில் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.







