மீண்டும் 100 நாள் வேலை வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி தாலுகா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 7 ஊராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் தொடங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமை தாங்கினார். மாதர் சங்க நகர செயலாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்..
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரியை சந்தித்து அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:-
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மந்தித்தோப்பு, பாண்டவர் மங்கலம், இனாம் மணியாச்சி, இலுப்பையூரணி, திட்டங்குளம், மூப்பன்பட்டி நாலாட்டின்புத்தூர் ஆகிய 7 பஞ்சாயத்துகளில் நடைபெற்று வந்த 100 நாள் வேலை திட்டம் நிறுத்தி வைக்கப் பிட்டுள்ளது .
7 பஞ்சாயத்துகளில் 100 நாள் திட்டத்தை உடடிையாக மீண்டும் அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஏழை மக்களின் சம்பள பாக்கியை வழங்க வேண்டும். ஏழை மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கு மாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.


