கோவில்பட்டி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்திற்கு எழுத்தாளர் கு.அழகிரிசாமி பெயர் வைக்க கோரிக்கை

கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்காவில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்திற்கு மறைந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமி பெயர் வைக்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான கோரிக்கை மனுவை முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் கிளை தலைவர் அபிராமி முருகன் தலைமையிலான குழுவினர் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர கருணாநிதியை சந்தித்து வழங்கினர்.

இந்த குழுவில் சாகித்ய பால புரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் கா.உதயசங்கர், நகர் மன்ற உறுப்பினர் ஜோதிபாசு , எழுத்தாளர் சாரதி, துணைத்தலைவர் திடவை பொன்னுச்சாமி, இணைச் செயலாளர் முத்துராஜ் , செயற்குழு உறுப்பினர் முருகேஸ்வரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பிரான்சிஸ், ஹரி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


