ராஜீவ்காந்தி நினைவு தினம்: கோவில்பட்டியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்த காங்கிரசார்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 34வது நினைவு தினம் இன்று (மே 21) கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கோவில்பட்டி நகர காங்கிரஸ் சார்பில் காந்தி மண்டபத்தில் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி காங்கிரஸ் கட்சி நகர தலைவர் அருண்பாண்டியன், மாவட்ட துணை தலைவர் அய்யலுசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொறுப்பாளர்கள் பிரேம்குமார், காமராஜ், மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு உறுப்பினர்கள் உமாசங்கர், திருப்பதிராஜா ,மாவட்ட பொதுச்செயலாளர்கள் சண்முகராஜா ,சுந்தர்ராஜ், சிவப்பிரகாசம்,சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ராஜாசேகர், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் அருள்தாஸ், ஆழ்வார்சாமி, பழனி சாமி, ஆல்வின்,முருகன், வேல்சாமி,கிழக்கு வட்டார தலைவர் மரியா சூசைராஜ், தர்மர்,ஆனந்த்,கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்


