கோவில்பட்டி தாலுகா இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தாலுகாவின் 36-வது மாநாடு இனாம் மணியாச்சி தாமரை மஹாலில் நடந்தது. மாநாட்டுக்கு ரெங்கநாதன்,அந்தோணியம்மாள், ரஞ்சிதம் ஆகியோர் தலைமைக்குழுவாக செயல்பட்டனர்.
மாநாட்டுக் கொடியை மாவட்ட நிர்வாக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் ஏற்றினார். மாவட்ட செயலாளர் கரும்பன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். தாலுகா செயலாளர் பாபு அறிக்கை சமர்ப்பித்தார்.

மாநாட்டில் 19 பேர் கொண்ட தாலுகாக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர் தாலுகா செயலாளராக பாபு, துணைச் செயலாளர்களாக ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், பொருளாளராக மாரியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்
. மாநாட்டில், நாலாட்டின்புதூர், இனாம் மணியாச்சி, மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், மந்தித்தோப்பு ஆகிய ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைத்தால், கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ள 100 நாள் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்படும். எனவே, நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு 100 நாள் வேலை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும். கழுகுமலையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். கோவில்பட்டி எட்டயபுரம் சாலை மங்கள விநாயகர் கோயிலில் இருந்து மந்தித்தோப்பு வரை செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுருத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


