கோவில்பட்டியில் புத்தக திருவிழா தொடக்கம்; 10 ஆயிரம் தலைப்புகளில் குவிப்பு


தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், கோவில்பட்டி வாசகர் வட்டம்,எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி புனித ஓம் கல்வி நிறுவனங்கள், ஆகியவை சார்பில் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி மண்டபத்தில் 7ம் ஆண்டு புத்தக திருவிழா இன்று தொடங்கியது.
ஜூன் -4ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் தாமோதரக் கண்ணன் தலைமை தாங்கினார். புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமணப் பெருமாள். எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி முதல்வர் செல்வராஜ், வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க தலைவர் ரவிவர்மா அனைவரையும் வரவேற்றார். பொன்னுஸ் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் சேர்மன் பொன்னுச்சாமி பரஞ்ஜோதி கலந்து கொண்டு புத்தக்கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 30 மாணவிகளுக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புத்தக பரிசு கூப்பன் வழங்கப்பட்டது.

ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம், மாரியப்பன் வீராச்சாமி, தமிழாசிரியை கெங்கம்மாள் ,எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி பேராசிரியர்கள், அரசு பள்ளி மாணவிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.
புத்தக திருவிழா கண்காட்சியில் இலக்கியம். நாவல், போட்டித் தேர்வு புத்தகங்கள், மருத்துவம், வரலாறு உள்ளிட்ட 10 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு விற்பனை செய்யும் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.
வருகிற 26ம் தேதி நான் விரும்பும் ஓவியம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி, 27ம் தேதி நான் வாசித்த புத்தகம் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி, 28ம் தேதி திருக்குறள் எழுதும் போட்டி ஆகியவர் மாலை 4 மணிக்கு நடைபெறும். ஒவியப் போட்டியில் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களும், மற்ற போட்டிகளில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களும் பங்கேற்கலாம்.

