கோவில்பட்டி நூலகத்தில் சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாம் நிறைவு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டார முழு நேர கிளை நூலகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாமின் நிறைவு விழா நூலக வளாகத்தில் நடந்தது.
முகாம் நிகழ்ச்சியில் சிறுவர்-சிறுமிகளுக்கான இசை நாற்காலி, ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், சிலம்பாட்டம், கதை சொல்லுதல், திருக்குறள் ஒப்புவித்தல் பலூன் உடைத்தல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நூலகர் மகாராஜன் வரவேற்புரை வழங்கினார் நூலகர் அம்பிகா கலந்துகொண்டார். சிறப்புவிருந்தினர்களாக எழுத்தாளர் க.உதயசங்கர், ஆசிரியை பா.மணிமொழி நங்கை, ஆசிரியை கண்ணகி, மைக்ரோ கிரீன்ஸ் உற்பத்தியாளர் சுரேஷ்குமார், காமராசர் மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரபு மற்றும் வன அலுவலர் க.பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற சிறுவர்-சிறுமியர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்கள்.
தொடர்ந்து மிக எளிமையான முறையில் வீட்டில் “மைக்ரோகிரின்”வளர்ப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வையும், கோடை விடுமுறையை மிகவும் பயன் உள்ளதாக மாற்றம் செய்திட கல்வித்துறையின் வழிகாட்டுதல்களையும் பெற்றோர்கள், குழந்தைகள் ஆகியோர் ஏற்புரை வழங்கி நன்றி கூறினர்.
விழா முடிவில் நூலகர் ச.கலைச்செல்வி நன்றி கூறினார்


