கோவில்பட்டியில் தனியார் மருத்துவமனைக்கு பெண் நோயாளியை கட்டாயப்படுத்தி மாற்றிய அரசு டாக்டர்; மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் விசாரணை

தென் மாவட்டங்களுக்கான மனித உரிமை மீறலுக்கான வழக்குகள் திருநெல்வேலியில் நடந்த முகாமின்போது தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. “
கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பிளாஸ்டிக் சிகிச்சை நிபுணர் ஒருவர், ஒரு பெண் நோயாளியை கட்டாயப்படுத்தி தனது மருத்துவமனைக்கு மாற்றியதாக அவரது கணவரான ராணுவ வீரர் எஸ்.கருப்பசாமி குற்றம்சாட்டி அளித்த மனுவை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன், விசாரித்தார்.
.ராணுவ வீரர் எஸ்.கருப்பசாமி 2019 ஆம் ஆண்டு அளித்த அந்த மனுவில், “கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த எனதுமணவி ஜெயாவை டாக்டர் சி. பிரபாகரன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து, அவருடைய ‘ஜெய் பிரைவேட் ஹாஸ்பிடல்’ என்ற தனியார் மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென அழுத்தம் கொடுத்ததாக கூறியிருந்தார். மேலும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்காக ரூ.11 லட்சம் பல கட்டங்களாக வசூலிக்கப்பட்டதுடன், முறையான சிகிச்சை வழங்கப்படாததால் அவரது மனைவி உயிரிழந்ததாகவும், புகாரில் கூறி இருந்தார்.

இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அரசு டாக்டரையும், மருத்துவ பணியாளர்களையும் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் கண்டித்தார்
இந்த வழக்கின் தீர்ப்பை வரும் ஜூன் மாதம் வழங்கப் போவதாக மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் வி. கண்ணதாசன் தெரிவித்தார்.
மேலும் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை எனக் குறிப்பிட்டு, டாக்டர் பிரபாகரன், விசாரணைக்கு தொடர்ந்து வராமலிருந்ததையும் கண்ணதாசன் கண்டித்தார்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் சூப்பிரண்டாக பணியாற்றும் டாக்டர் கமலவாசனை கூறுகையில் “டாக்டர் பிரபாகரனை, ஒழுக்கக்கேடு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவுக்கு மாற்றியிருப்பதாக தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த SHRC உறுப்பினர் கண்ணதாசன், “இது ஒழுக்க நடவடிக்கையாகக் கருத முடியாது; மாற்றுப்பணி என்பது தண்டனை அல்ல” எனக் கண்டித்து, அரசு மருத்துவமனை தேசிய மருத்துவ ஆணையத்தின் (விதிமுறைகளை பின்பற்றத் தவறியுள்ளது என சுட்டிக்காட்டினார்.

நோயாளியின் சிகிச்சை பெறும் அடிப்படை உரிமைகளை மீறியதாக கூறப்படும் இந்த நடவடிக்கையில், சம்பந்தபப்ட்ட டாக்டர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
