கோவில்பட்டி அருகே கண்மாய் ஆழப்படுத்தும் பணி; மார்கண்டேயன் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் 2024_2025 ம் ஆண்டு மாநில நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ 6.80 லட்சம் மதிப்பீட்டில் கண்மாய் ஆழப்படுத்துதல் பணி நடக்கிறது.
இந்த பணியை சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவர் மார்கண்டேயன் எம்.எல்.ஏ, தொடக்கி வைத்தார். மேலும் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் தானியக்கிடங்கு கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணியினை துரிதப்படுத்துமாறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீதக்கண்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளத்துரை கிளை செயலாளர்கள் உத்திரக்குமார்,பொன்னுச்சாமி,செல்வராஜ் தங்க மாரியப்பன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெய செல்வம் ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் ராமமூர்த்தி துணை அமைப்பாளர் சுரேஷ்குமார் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்,


