கோவில்பட்டியில் 70% நாய்களுக்கு தடுப்பூசி இலக்கு நிர்ணயம்; நகராட்சி ஆணையாளர் கமலா தகவல்

கோவில்பட்டி நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மற்றும் கழுகுமலை, கயத்தார், புதூர், கடலையூர், விளாத்திகுளம் ஆகிய கிராம ஊராட்சிகளின் தூய்மைப் பணியாளர்களுக்கு சமுதாய நாய்களை பிடித்தலுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி நகராட்சி நகர்மன்ற தலைவர்.க.கருணாநிதி உத்திரவின் பேரில் மற்றும் நகராட்சி ஆணையாளர்.கமலா வழிகாட்டுதலின்படி இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

விலங்குகள் நல வாரிய உதவி இயக்குநர்கள் மருத்துவர்.விஜயஸ்ரீ, கால்நடை மருத்துவர்.வி.சுப்பிரமணியன் தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய உறுப்பினர் ஜெயகிருஷ்ணன் மற்றும் நகர்நல அலுவலர் வசுமதி, துப்புரவு அலுவலர் ஆ.இளங்கோ, துப்புரவு ஆய்வாளர் இரா.சுதாகரன் ஆகியோர் முன்னிலையில் பயிற்சியை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ரேபிஸ் வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவில்பட்டி நகரில் உள்ள மொத்த நாய்களில் 70% நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி என்ற இலக்கினை தீர்மானித்து தொடர்ந்து தடுப்பூசி போடப்பட உள்ளது.
மேற்கண்ட தகவல்களை கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா தெரிவித்துள்ளார்.

