• May 20, 2025

தங்க நகைக்கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்

 தங்க நகைக்கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்

தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும். எடுத்துக்காட்டாக நகையின் மதிப்பு 100 ரூபாய் என்றால் 75 ரூபாய் வரை மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும்.

* தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும்.
* தங்க நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெற வேண்டும்* குறிப்பிட்ட வகையிலான தங்கங்களுக்கு மட்டுமே நகைகடன் வழங்கப்படும். நகை 22 காரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்
* வெள்ளி நகைகளுக்கும் நகைக்கடன் பெறலாம்
* தனிநபர்கள் ஒரு கிலோ தங்க நகை வரை மட்டுமே அடகு வைக்க முடியும்.

* நகைக்கடனாக பெறப்படும் தங்கம் 22 காரட் மதிப்பின் அடிப்படையில் கடன் வழங்கப்படும்
* நகைக்கடன் ஒப்பந்தத்தில் முழுமையான தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும்.
* நகைக்கடன் வாங்கியவர் அந்த கடனை திரும்ப செலுத்திய 7 வேலை நாட்களில் நகையை திரும்பி ஒப்படைக்க வேண்டும். 7 வேலை நாட்களில் ஒப்படைக்கவில்லையென்றால் கடன் கொடுத்தவர் (வங்கிகள்) ஒரு நாளைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக கொடுக்க வேண்டும்.’

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *