காஷ்மீரில் 26 சுற்றுலா பயணிகள் பலி: கோவில்பட்டியில் பாஜக சார்பில் மோட்சதீபம் ஏற்றி அஞ்சலி

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கு கோவில்பட்டியில் பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தி மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
அண்ணா பஸ் நிலையம் அருகே பயணியர் விடுதி முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு நகர பாஜக தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் மகாலட்சுமி வேல்முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜா, மாவட்ட பொருளாளர் கணேஷ், பட்டியல் அணி மாநில செயலாளர் சிவந்திநாராயணன் மற்றும் பாஜக நிர்வாகிகள், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சுற்றுலா பயணிகளின் ஆன்மா சாந்தியடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.


