• May 21, 2025

பஹல்காம் தாக்குதல் : பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி  நடவடிக்கைகள்

 பஹல்காம் தாக்குதல் : பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி  நடவடிக்கைகள்

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த  இக்கூட்டத்தில் மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2½ மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-
* இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது.

* சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
* இந்தியாவின் பாதுகாப்பு, கடற்படை, விமானப்படை ஆலோசகர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து அழைக்கப்படுவார்கள்.
* பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1-ந்தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும்.
* சுற்றுலா விசாவில் தற்போதுள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்.
* சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
* பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவிற்குள் பயணம் செய்ய அனுமதி இல்லை.
* மேலும் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.




Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *